சனி, 24 அக்டோபர், 2009

கருணாவின் கூத்து என்ன கொடுமை......

அமைச்சர் கருணா அம்மானின் பிரத்தியேக செயலாளரின் அழகை ஒருபடி உயர்த்துமுகமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் வேடிக்கையான ஓர் விடயம். நேற்று கொழும்பிலுள்ள மிகவும் உயர் தரம் கொண்ட வைத்தியசாலையில் ஒன்றான அப்பலோ மருத்துவமனையில் இவருக்கான பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக செலவளிக்கப்பட்ட பணம் 465.000 ரூபாய். இச்சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக செய்தவர் வைத்தியர் பூர்ணிமா மூர்த்தி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அறையின் இல 4006 எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழை மக்களின் பணம்தான் இதற்குப் பயன்பட்டிருக்கின்றது. அதாவது ஓர் அழகிய நங்கைக்காக அதுவும் அநாவசியமற்ற ஓர் விடயத்திற்காக இவ்வளவு பணமா?. கருணாவின் பிரத்தியேக செயலாளரான அம்மணி வெளியில் செல்லும் போது மிகவும் அதிகளவான மேக்கப்புடன்தான் செல்வார். அது இந்தக் கோடைவெயிலுக்கு பட்டென்று எல்லாம் வியர்வையில் கரைந்து கீழே கொட்டிவிடும். பின்னர் அந்தப் பெண்மனியின் உண்மையான தோற்றம் வயதானவராக விளங்கிவிடும் கருணாவிற்கு சங்கடம். இதனால்த்தான் நிரந்தரமாக வயதானவரை குமராக மாற்றும் சத்திரசிகிச்சையினை மேற்கொண்டிருக்கின்றார். இந்தக் காசை ஓர் அநாதை இல்லத்திற்கு கொடுத்திருந்தால் சில குழந்தைகளின் வாழ்வுநிலை உயர்ந்திருக்கும் என மட்டுநகர் மக்கள் மனம் குமுறுகின்றனர்.

புலி முகவர்களைத் தேடி தாய்லாந்தில் வேட்டை, அப்பாவி தமிழ் அகதிகள் பாதிப்பு.. புலி முகவர்களான பிரபாவும், சங்கருமே பிரதான இலக்கு!

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜண்டாக செயற்பட்டுவரும் கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான யோகி என்கிற யோகேஸ்வரன் தங்கியிருந்த தாய்லாந்தின் பாங்கோக் நகரில் உள்ள சுக்குமித் பகுதியில் நேற்று முன்தினம் பாங்கோக் பொலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 15இலங்கைத் தமிழ் அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆயினும் யோகி என்னும் யோகேஸ்வரன் தப்பிச் சென்றுவிட்டார். குறித்த 15 இலங்கைத் தமிழ் அகதிகளும் 01வருட தாய்லாந்து விசாவுடனும், களவாகப் பெறப்பட்ட வேலைக்கு செல்வதற்கான போலி அனுமதிப் பத்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் அக்ரம் என்கிற கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் நபரும், ஜெகன் என்கிற தமிழரும் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மேற்படி யோகி என்கிற யோகேஸ்வரனின் வலதுகரமாக அதாவது ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யோகியின் ஏஜண்ட் தொழிலுக்கான உதவி முகவராக அதாவது சப் ஏஜண்டாக செயற்பட்டுவந்த கொழும்பைச் சேர்ந்த அன்ரன் என்கிற அன்ரனி தான் தங்கியிருந்த தாய்லாந்தின் பேட்காசெயம் என்னும் இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மேற்படி 15 இலங்கைத் தமிழ் அகதிகளையும் கொவின்புளு என்னுமிடத்திலுள்ள தடுப்புமுகாமில் தங்கவைத்துள்ள தாய்லாந்து அரச தரப்பினர், அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு அங்குள்ள இலங்கைத் தூதுவராயலத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடன் கைதுசெய்யப்பட்ட அக்ரம் மற்றும் ஜெகன் ஆகிய இருவரும் சோன்புரி என்னுமிடத்தில் அமைந்துள்ள சோலே என்னும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை தப்பிச் சென்றுள்ள யோகி என்னும் யோகேஸ்வரன் மற்றும் கொழும்பைச் சேர்ந்த அன்ரன் என்கிற அன்ரனி ஆகிய இருவரையும் கைதுசெய்யும் பொருட்டு தாய்லாந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக வலைவீசித் தேடிவருகின்றனர். இவர்களைத் தேடும் நடவடிக்கைகளின் காரணமாக தாய்லாந்திலுள்ள அப்பாவி இலங்கைத் தமிழ் அகதிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன் மேலும் பலர் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி யோகி மற்றும் அன்ரனி உள்ளிட்டவர்கள் புலி முகவர்களான பிரபா மற்றும் சங்கர் ஆகியோரின் தலைமையின்கீழ் செயற்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து பொலீசாரின் தற்போதைய விசேட தேடுதல் வேட்டையின்போது புலி முகவர்களான பிரபாவும் சங்கருமே பிரதான இலக்காக உள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தோலில் புனித குர்ஆன் வசனங்கள்
தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
இக் குழந்தையின் உடலில் குர்ஆன் வசனங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை புரியாமல் மருத்துவ உலகே திகைப்படைந்துள்ளது.
தென் ரஷ்யாவில் செச்சினியாவிலுள்ள தகெஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த அலி யகுபோவ் என்ற மேற்படி குழந்தை பிறந்த பின் அதன் நாடியில் "அல்லாஹ்" என்ற வார்த்தை தோன்றியதையடுத்து அவனது பெற்றோர் வியப்படைந்தனர்.
தொடர்ந்து அக் குழந்தையினது முதுகு, கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றில் அராபிய வசனங்கள் பல தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
தற்போது 9 மாத வயதாகும் அலி யகுபோவின் தோலில் வாரத்திற்கு இரு தடவைகள் புதிய குர்ஆன் வசனங்கள் தோன்றுவதாகவும் புதிய வசனங்கள் தோன்றும் போது பழைய வசனங்கள் மறைந்து விடுவதாகவும் அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
திங்கட்கிழமையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவுகளிலும் சிறுவனது உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றி வருவதாகக் கூறிய மதினா, இதன்போது குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்து சிறுவன் மிகுந்த வேதனையுடன் அழுவதாகக் கூறினார்.
"இதன்போது எமது மகனை பற்றிப் பிடிக்க முடியாது. அவனது உடல் உதறிக் கொண்டிருப்பதால் அவனை தொட்டிலிலேயே படுக்க வைத்திருப்போம். அவன் வேதனைப்படுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
அலி யகுபோவின் உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றும் வரை மத நம்பிக்கையற்றவராக இருந்த அவரது தந்தை, தற்போது தீவிர மதப் பற்றாளராக மாறியுள்ளதாக பாலகனின் தாயாரான மதினா தெரிவித்தார்.
இது தொடர்பில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் அஹமட்பாஷா அமிராலேவ் விபரிக்கையில், "இந்த சிறுவன் இறைவனின் தூய அடையாளமொன்றாக உள்ளான்.
எமது பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை நிறுத்தும் முகமாக அல்லாஹ்வே இப்பாலகனை எம்மிடம் அனுப்பி வைத்துள்ளான்'' என்று கூறினார்.

கப்டன் அலி விவகாரம் முடிவுக்கு வந்தது. பொருட்கள் வவுனியாவைச் சென்றடைந்தன.

புலம் பெயர் தமிழ் மக்களினால் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட கப்டன் அலி எனும் நிவாரணக் கப்பலில் உள்ள பொருட்கள் 5 மாத கால தாமதத்தின் பின்னர் நேற்று வவுனியா சென்றடைந்தது. நீண்ட நாட்கள் கொழும்பு மற்றும் இந்திய துறைமுகங்களில் தேங்கிக் கிடந்த இப்பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பாரமெடுத்துள்ளனர். இக்கப்பலில் கொண்டுவரப்பட்ட 884 மெற்றிக்தொன் பொருட்களும் ஐ.சி.ஆர்.சி இனரால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியில்புலிகளின் திருட்டை மடக்கி பிடிக்க முயன்ற மற்றைய பொதுமகனும் இன்று மரணமானார்!

திருட்டில் ஈடுபட்ட புலிகளை பிடிக்க முயன்றபோது புலிகளின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபர் இன்றையதினம் மரணமானார். கடந்த 17ம் திகதி வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் ஜந்துக்கு மேற்பட்ட வீடுகளில் பணம், நகை என்பனவற்றை புலிகள் திருடிக் கொண்டு ஆறாவது வீட்டிற்குள் புக முயன்றபோது அவ் வீட்டில் உள்ளவர்கள் குரல் எழுப்பியதை தொடர்ந்து அயலர்வர்கள் திருடர்களை துரத்திசென்றபோது திருட்டில் ஈடுபட்ட புலி கும்பல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 36வயதுடைய ராமமூர்த்தி புலேந்திரன் என்ற பொதுமகன் கொல்லப்பட்டும், திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவர் படுகாயமடைந்தார்.வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டதுடன், தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் இருந்த கிருபாகரன் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். மேற்படி திருட்டில் ஈடுபட்டவர்கள் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களே கடந்த காலங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும், இவ்வாறான திருட்டு, கொலை, கொள்ளை, கப்பம் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த புலிகளின் பெண் ஒருவர் உட்பட நால்வர் நேற்றையதினம் வவுனியாவில் வைத்து விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை என்ற பெயரில் புலிகள் கடந்த காலங்களில் இவ்வாறு பல சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன.

திங்கள், 19 அக்டோபர், 2009

துயர் பகிர்வு

புலிகளின் பொய் பரப்புரையூடகங்களாக பல ஆண்டுகாலம் இயங்கி வந்த தமிழ்நாதம், புதினம் ஆகிய இரு இணையதளங்களும் 18.10.09 ஞாயிற்றுக்கிழமை அன்று (புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு சரியாக ஐந்து மாதங்கள் கடந்து) அகால மரணமடைந்துள்ளன. இவ் அறிவித்தலை அனைத்து ஈழநாதம், புதினம் வாசகர்களுக்கும் ஆழ்ந்த மனவருத்ததுடன் அறியத் தருகின்றோம். இந்த இரு இணையத்தளங்களும் இறந்த செய்தி கேட்டு இவர்களுடன் இணைப்பிலிருந்த அனைத்து “ஒட்டுண்ணி” ஊடகத்தினரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்து மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது. இந்த இரு இணையதளங்களுக்கும் வன்னிக்களத்திலிருந்து நேரடியாக ‘பொய்” செய்திகளை வழங்கி கொண்டிருந்த செய்திநிருபரான “புதினப் பொய்யர்” என்பவர் முள்ளிவாய்கால் பிரதேசத்தில் வைத்து தேசிய தலைவருடன் சேர்ந்து தேசத்துரோகமாக யாருக்கும் சொல்லாமல் கொள்லாமல் கடந்த மே மாதம் 16திகதி படையினரிடம் சரணடைந்ததால் கடந்த நாலு, ஐந்து மாதங்களாக “பொய்” செய்திகள் எதுவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த இவ் இரு இணையதளங்களும் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
வேறு ஒரு செய்தியூடக தகவலின்படி இந்த இணையதளங்களை இயக்கிய உரிமையாளர்கள் சிறிலங்கா புலனாய்வு துறையினரால் கைது செய்யபட்டு கொழும்புக்கு கொண்டு செல்லபட்டதாகவும் அறிய முடிகிறது. கே.பி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் புலிகள் சார்பாக வெளிநாடுகளில் இயங்கிய பல முக்கியஸ்தர்கள் ஏற்கனவே கைது செய்யபட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் விபரங்களை புலிகளமைப்பினர் மறைக்க முற்பட்டாலும் அவர்களின் முழுவிபரங்களும் வெகுவிரைவில் வெளியிடப்படலாம் என கொழும்பிலிருக்கும் புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
நன்றி அதிரடி

இலங்கைக்கு மேலும் ரூ. 500 கோடி வழங்க இந்திய அரசு தீர்மானம்

இலங்கைத் தமிழர்களின் ‘மறுவாழ்வுக் கென மேலும் 500 கோடி ரூபாவை வழங்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதென மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.இது குறித்த திட்ட அறிக்கை இலங்கை அரசிடமிருந்து கிடைத்ததும் நிதி ஒதுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.அமைச்சர் சிதம்பரம் நேற்றுக் காலை 9.00 மணிக்கு கோபாலபுரம் சென்று முதல் அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இருவரும் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்புக்கு பிறகு ப. சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது, அண்மை யில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று நிவாரணக் கிராமங்களில் தமிழர்களை சந்தித்து பேசி நிலவரங்களை அறிந்து வந்திருந்தனர். ஆய்வறிக்கையும் வழங்கினர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்தேன். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தும் பேசினோம்.முதல் அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை 5 ஆயிரம் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடக்கம் என்பதால் மெதுவாக உள்ளது போகப் போக அனைவரும் குடியமர்த்தப்படுவார்கள். இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ. 500 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. மீண்டும் ரூ. 500 கோடி வழங்க தயாராக உள்ளது.இது குறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு நிதி ஒதுக்குவோம் என்றார்

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்களும்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த வியாழனன்று வளைகுடாக் கடலுக்கப்பால் கடத்தப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலில் இலங்கையர்கள் சிலரும் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர்களின் எண்ணிக்கையோ அல்லது பெயர் விபரங்களோ இதுவரை கிடைக்கப்பபெறவில்லை.

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

‘பிரபாகரன் படத்துக்கு மாலை அணிவிக்கப்படும் - குழப்பமடையவேண்டாம்!’

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்தின உரை இம்முறை நடைபெறாது என்ற போதும் பிரபாகரனுக்கான அக(புற) வணக்கத்தை செலுத்துவதற்கு வெளிநாட்டு புலிப்பினாமிகள் தயாராகி வருகின்றார்கள். இதன் முன்னோட்டமாக தமது மேல்மட்ட ஆதரவு தளத்தில், ‘இம்முறை பிரபாகரனுக்கு மாலை அணுவிக்கப்போகிறோம் யாரும் குழப்பமடையவேண்டாம்’ எனக் கோரப்பட்டுள்ளனர்.கறுப்பு ‘சேட்’ போட்டவனெல்லாம் தந்தை பெரியாராகிவிட முடியும் என்று இந்தியாவில் மனப்பால் குடிக்கும் கூட்டம் இந்தத் தகவலையடுத்து பெரும் குழப்பமடைந்துள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான், அனுமான் “கண்டேன் சீதையை” என்று இராமனுக்கு உரைத்ததுபோல சீமான் “கண்டேன் பிரபாகரனை” என்று கதைவிடுகிறார். வெள்ளை உடையணிந்த கறுப்புள்ளம் கொண்ட பாதிரி ஜெகத் ஜெஸ்பாரும் தன் பங்குக்கு ‘நான் கிளிநொச்சி நோக்கி வருவேன்’ என பிரபாகரனே கூறியதாக தனது இணையத்தளத்தில் றீல் விட்டும் புலி ஊடகங்களே கண்டுகொள்ளவில்லை.தமிழர் போராட்டம் என்று அநியாயமாக இளைஞர்கள், யுவதிகள், சிறுவர் - சிறுமியரைப் பலிகொடுத்துவிட்டு அவர்களின் பெயரால் மாவீரர் உரை. அதுவும் தனது பிறந்த நாளுக்கும் மாவீரர்களின் இறந்த நாளுக்கும் பாலம் அமைத்து பிரபாகரனின் உரை.இந்தக் கொடுமை போதாதென்று அந்த பிதட்டலுக்கு கனடா சேரனில் இருந்து கொழும்பு கா. சிவத்தம்பி வரை பொழிப்பு எழுதுவார்கள். தற்குறி தமிழ் ஊடகங்கள் தொடக்கம் தறிகெட்ட ஊடகவியலாளர்கள் வரை ஒரே புலம்பல்தான்.இம்முறையுடன் அது நடக்காது. அதற்குப் பதிலாக பிரபாகரனுக்கு மாலை அணிவிக்கப்படும். மாலை அணிவித்தது பிழை - சரி என்ற வாதம் எழலாம். அல்லது மாலை அணிவிப்பதற்கு யார் யாருக்கு தகுதி இருக்கு என்று விவாதம் எழலாம். இவ்வாறு சமூகத்துக்கும் அறிவியலுக்கும் உதவக்கூடிய விவாதத்தை தமிழ்கூறும் நல்லுலகு காணும். இவ்வாறான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது எமக்கெல்லாம் பெருமைதானே!இதில் வேடிக்கையென்னவென்றால், தமிழீழம் வேண்டிப் போராடிய மண்ணில் பிரபாகரனின் படத்துக்கு யார் மாலைபோடுவது? அட பிரபாகரனின் படத்தையாவது யாராவது வைப்பார்களா? யாராவது வைத்திருப்பார்களா? எல்லாம் புலன் பெயர்ந்துள்ள கொழுப்பெடுத்த தமிழினவாளர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள்தான் பிரபாகரனுக்கு தலைப்பாகையும் கட்டினார்கள் இப்போ மாலையும் அணிவிக்கப்போகிறார்கள்.

அகதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். பலர் உயிரிழப்பு.


அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் படகொன்றில் சென்று கொண்டிருக்கையில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டபோது உண்ணாவிரம் இருந்த இலங்கை அகதிகள் என தம்மை கூறுவோர் 56 மணித்தியாலயங்களின் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.அவர்களில் பலர் உயிர் இழந்துள்ளதாக Sydney Morning Herald எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. அங்கு சென்ற மக்கள் சார்பான பேச்சாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள அலெக்ஸ் என்பவர், கடத்தல்காரர்கள் 30 குடும்பங்களிடமிருந்து 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயணச் செலவாக பெற்றுள்ளதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தை ஒன்றுக்கு கூட 15000 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 4 மில்லியின் அமெரிக்க டொலர்களை வழங்கக் கூடிய 30 குடும்பங்கள் வன்னியில் இருந்தாக என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

வவுனியாவில் துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றவர் முன்னாள் புலி (சுப்புண்).

கடந்த இரவு வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பிரதேசத்தில் கொள்ளையடிப்பதற்காகச் சென்று மக்களால் சுற்றி வளைக்கப்பட்டபோது ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்ற நபர் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன்று முறிப்பு. பிரதேசத்தை சேர்ந்த இவர் சுப்புண் எனும் பெயரில் வவுனியா மக்களினால் அறியப்பட்டிருந்தார். இவர் கடந்த காலங்களில் வவுனியாவில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமையை மக்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
நன்றி இலங்கைநெற்

76 இளைஞர்களுடன் புலிகளின் கப்பல் கனடிய கடற்பரப்பில் (வீடியோ உள்ளே)

வன்கூவர் தீவுக்கு மேலே கனடியக் கடற்பரப்பில் கனடிய கடற்படை மற்றும் பொலிஸாரினால் படகொன்று 76 இளைஞர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. தகவல் ஒன்றின் அடிப்படையில் செயற்பட்ட கடல்கடத்தல் தொடர்பான விசேட பயிற்சி பெற்ற படையினர் இக்கப்பலினை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து அதில் இருந்தவர்களை விசேட தடுப்பு முகாமில் வைத்துள்ளதாக கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் வான் லொன் தெரிவித்துள்ளார். ஓசியன் லேடி எனும் பெயரிடப்பட்டு கனடிய கடற்பரப்பை அடைந்துள்ள இக்கப்பலிலுள்ள அனைவரும் சிறந்த உடல்நலத்துடன் காணப்படுவதாகவும், குறிப்பிட்ட கப்பல் எங்கிருந்து புறப்பட்டுள்ளது என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தோல்வியை தழுவியுள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பு சர்வதேச ஆட்கடத்தலில் ஈடுபட்டுவருவகின்றமை தெளிவாகின்றது. புலிகளியக்கத்திற்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருந்த புலிகளின் கப்பல் கம்பனிகளின் செயற்பாட்டாளர்களே இவ் ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட கப்பல் கம்பனிகளின் பெயரில் பொருத்தமான கப்பல்களை கொள்வனவு செய்யும் இவர்கள் அவற்றின் மூலம் சர்வதேச மட்டத்தில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றமை மிகவிரைவில் ஆதாரங்களுடன் நிருபனமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்குறிப்பிட்ட கப்பலினை புலிகளின் சர்வதேச ஆட்கடத்தல் வலைப்பின்னலைச் சேர்ந்த இந்தோனிசியாவில் இருந்து செயற்பட்டுவரும் பிரித்தானியா பிரஜையும் புலி உறுப்பினருமான சங்கர், தாய்லாந்தில் இருந்து செயற்படும் கனடிய பிரஜாவுரிமை கொண்டுள்ள கட்ட ரவி, மணி, சீலன், சதீஸ், கருப்பை அல்லது கடாபி, ஆகியோரே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சர்தேச மட்டத்தில் பல குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர்கள் என்பதுடன் கடாபி என்பவர் இந்தியாவூடாக புலிகளுக்கு பல தொழில்நுட்பங்களை சட்டவிரோதமாக அனுப்ப முனைந்த குற்றத்திற்காக கியூ பிரிவு பொலிஸாரினால் தேடப்படுபவருமாவர். இந்தோனேசியாவில் இருந்து 42 நாட்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ள கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதுடன் இக்கப்பலில் ஓட்டிகளாக செயற்படுவோர் புலிகளின் கப்பல் கம்பனிகளின் கப்படன்களும், முன்னாள் கடற்புலிகளும் என நம்பப்படுகின்றது. இக்கப்பலில் வெளிநாடுகளுக்கு கொண்டுவரப்படுபவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என புலம் பெயர் தேசத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு கூறப்பட்டாலும் இது முற்றிலும் வியாபார நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடு என்பது, கப்பலில் பயணம் செய்துள்ளவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் தகவல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படுகின்றது. இக்கப்பல்களில் ஏற்றப்படுபவர்களின் உறவினர்களிடம் இருந்து கணிசமான அளவு முற்பணம் வாங்கப்பட்டுள்ளதுடன் பல உடன்படிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் புலிகளின் சர்வதேச மட்டத்திலான இச்செயற்பாடு நிச்சயம் தமிழ் மக்களுக்கு பாரிய சிக்கல் ஒன்றை ஏற்படுத்தும் என பலரும் அஞ்சுகின்றனர் வீடியோவிற்கு அழுத்துங்கள்

கனடா நிருபர்

மலேசியாவில் இருந்து செயற்படும் புலி உறுப்பினர்களால் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து அவுஸ்திரிலியாவிற்க்கு இலங்கை தமிழ் அகதிகள் அதிர்ச்சியூட்டும் தகவல்


மலேசியாவில் இருந்து செயற்படும் புலி உறுப்பினர்களால் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து அவுஸ்திரிலியாவிற்க்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளன
புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் நேரடி கண்கானிப்பின் கீழ் செயற்பட்டபுலிகளின் கப்பல்களுக்கு பொறுப்பான பிரித்தானியா பிரஜையான சங்கர் மற்றும் நோர்வே பிரஜையும் இலங்கை தமிழருமான ஸ்டிபன் ராஜா என்று அழைக்கபடும் சோதி மற்றும் ஜேர்மனிய பாபு பிரித்தானியாவில் வசிக்கும் புலிகளின் உறுப்பினரான மோகன் மற்றும் மலேசியாவில் உள்ள கண்ணன் மற்றும் டேனியல் புலிகளின் செயற்பாட்டாளாரும் மலேசியாவில் வசிப்பவருமான ரொனால்ட் அல்லது சுகு இந்தோனிசியாவில் உள்ள பாபு மற்றும் மதி ஆகியோர் இக்கப்பல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது
மோகன் தற்போது இந்தோனிசியாவில் பதுங்கியுள்ளதாக தெரியவருகிறது ஏனையோர் மலேசியாவில் வசித்துவருவதாகவும் இதில் ரொனால்ட் அல்லது சுகு என்பவர் சர்வேதேசரீதியாக புலிகளின் பணத்தினை கையாளபவர் எனவும் இவர் மலேசியாவில் ஆடம்பர மாளிகை ஒன்றில் புலிகளின் பணத்தில் வாழ்ந்து வருபவர் எனவும் மலோசியாவில் அதிவிலை கூடிய பொறுமதிமிக்க வாகனத்தில் வலம் வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது
இதில் சோதியும் ரொனால்ட் அல்லது சுகு வன்னிமுகாமில் உள்ள புலி உறுப்பினர்களை அவுஸ்திரிலியாவிற்க்கு அனுப்புவதற்க்கு கப்பல் வாங்கவேண்டும் என கனடாவில் மூன்று லட்சம் டொலர்களை சேகரித்து அதில் 35.000 டொலர்களுக்கு பாவனைக்கு உதவாத படகு ஒன்றினை வாங்கி அதில் 30 புலிஉறுப்பினர்களையும் அத்தோடு ஏனைய 230பேரிடம் 15.000 டொலர்கள் வீதம் பெற்றுகொண்டு அப்படகில் அனுப்பிவைத்த படகை தற்போது இந்தோனிசியா கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது இதன் ஊடாக அம்மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாது செயற்பட்டதன் மூலம் அம்மக்களை பலிகொடுக்கவும் துணிந்துள்ளனர்
ரொனாலட் சோதி போன்றோர் மலோசியாவில் பயங்கரவாத பாதளாகுழுக்கள் போன்று செயற்படுவதாகவும் மலோசியாவிக்கு செல்லுகின்ற தமிழ் செல்வந்தர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தியும் மிரட்டியும் பணம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும்
தெரிவருகிறது அண்மையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் மகனை கடத்தி மூன்று மில்லியன் டொலர்களை வழங்கியபின் அவர் விடுவிக்கபட்ட சம்பவமும் குறிப்பிடதக்கது
இக்குழுவினர் சட்டத்திற்க்கு முரணாவகையில் புலிகளின் பெயரை அல்லது தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி பலகோடி டாலர்களை கொள்ளைலாபாக பெற்று வருகின்றபோதிலும் அப்பணத்தினை பாதிக்கபட்ட புலிஉறுப்பினர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது போராட்த்தால் பாதிக்கபட்ட மக்களுக்கோ செலவழிப்பதுயில்லை மாறாக தாங்களின் தனிப்பட்ட உல்லாச வாழக்கைக்கே செலவழிக்கபடுகிறது என்பதும் குறிப்பிடதக்கது இவர்களின் நிழற்படங்களை இணையதளம் வெகுவிரைவில் வெளியிட உள்ளோம்

சனி, 17 அக்டோபர், 2009

யாழ்ப்பாணக் கோட்டையைப் புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது

பயங்கரவாதிகளான புலிகளினால் சேதப்படுத்தப்பட்டு பாவனைக்கு உதவாத நிலையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கோட்டையைப் புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளதாக இலங்கையின் புவிசரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த திட்டத்திற்காக சுமார் 300 மில்லியன் ரூபாய்கள் செலவாகுமென எதிர்பார்ப்பதாக புவிசரிதவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சம்பத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் டச்சுக்கோட்டை இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்படவுள்ளது.
முதற்கட்ட வேலைத்திட்டத்திற்காக 100 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இந்த முதலாம் கட்டப் புனரமைப்புப் பணிகள் இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி யாழ்ப்பாணக் கோட்டையானது போர்த்துக்கீசரால் நிர்மாணிக்கப்பட்டு பின்னர் டச்சுக்காரரால் 1658ம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் இந்தக் கோட்டையானது 1795ம் ஆண்டு ஆங்கிலேயரால் பொறுப்பேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் கட்டுமானத்திற்காக முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசு அரசு அழைப்பு



காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறீலங்கா கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கை செயல்திட்ட முன்மொழிவுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் நாள் முதல் ஏற்கவிருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் 1.6 மில்லியன் மெட்ரிக் தொன் சீமந்தை உற்பத்தி செய்யும் வகையிலான தொழிற்சாலை நிர்மாணம் தொடர்பில் அந்த முன்மொழிவு அமைய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இதற்கு தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்கள் சிறீலங்கா சீமெந்து கூட்டுத்தாபனத்துடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெடிபொருட்களும் உலர் உணவுப் பொருட்களும் மீட்பு

வவுனியா பொலிஸார் மகாவில்லுப் பிரதேசத்தில் வெடிபொருட்களையும் உலர் உணவுப் பொருட்களையும் மீட்டுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதலின்போது, 5, 3 கிலோகிராம் எடைகொண்ட கிளேமோர் குண்டுகள் இரண்டும், 17 கிலோகிராம் சீ4 வெடிமருக்துக்களும், 1440 ரி56 ரக துப்பாக்கிகளுக்கான ரவைகளும், 98 டெற்னேற்றர்களுடன் மேலும் சில இராணுவ உபகரணங்களும் உலர் உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளையும், துப்பாக்கிச் சூடும் வவுனியாவில் சம்பவம்.. புலிகள் நடத்தியதாக சந்தேகம்! (இணைப்பு-2)


வவுனியாவில் நேற்றிரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக்கொள்ளைச் சம்பவத்தில் மூன்று வீடுகள் ஒரே நேரத்தில், ஒரே விதத்தில் கொள்ளையிடப் பட்டுள்ளன. கொள்ளையனாக வந்த நபர் தான் கொண்டு வந்திருந்த (ஏகே47ரகத் துப்பாக்கி) ஆயுதத்தைக் காண்பித்து வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்துள்ளார். அடிபணிய வைத்த அவர் அங்கிருந்தவர்களிடம் “எங்களுக்கும் வயிறிருக்கின்றது நாங்களும் சாப்பிட வேண்டும்” என்னும் தோரணையில் பேசியுள்ளார். அதன்பின்னரே அங்கிருந்தவற்றைக் கொள்ளையிட்டுள்ளார். இவர் தனது கைவரிசையைக் காட்டிய மூன்று வீடுகளில், புளொட் ஆதரவாளர் ஒருவருடைய வீடும் அடங்கியுள்ளது. எனவே, இக்கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப் பட்;டுள்ளதாகவே தோன்றுகின்றது. அதுமட்டுமன்றி, அவர் கொள்ளையிட்ட விதமும், கொண்டிருந்த தற்துணிவும் இவர் நிச்சயமாக புலிகள் இயக்க உறுப்பினர் என்றே பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. எனினும் அவர் வவுனியா பிரதேசத்தினைச் சேர்ந்தவரல்ல என அவரது முகத்தை அடையாளம் கண்டவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். எவ்வித தயக்கமுமின்றி தன்னுடைய முகத்தினை வெளிப்படுத்தி இத்திருட்டில் ஈடுபட்டுள்ள இவர் நிச்சயமாக இறுதி யுத்தத்திலிருந்து தப்பித்த புலிகள் இயக்கத்தவராகவே இருக்க முடியும் என பலரும் நம்புகின்றனர். இந்நபர் பேசிய விதமும், இவர் அபகரித்து சென்ற பொருட்களும் ஒருவர் இருவருக்காக நிகழ்த்தப்பட்டதல்லவென்றும், இவருடன் இன்னும் பலர் இருக்க முடியும் என்ற ஐயங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இவர் கொள்ளையிட்டு விட்டு தப்பிச் செல்ல எத்தனித்தபோது, கொள்ளையிடப்பட்ட வீடுகளில் முதலாவது வீட்டின் உரிமையாளர், தன்னுடைய முன்வீட்டு இளைஞரையும் அழைத்துக் கொண்டு இவரைப் பிடிப்பதற்கு முயற்சித்துள்ளார். இவர்களுடன் இன்னும் சிலரும் திருடனான நபரைப் பிடிக்க முற்படுகையில் அச்சம் கொண்ட குறித்தநபர் இவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூட்டை நிகழ்தியுள்ளார். இவ்வேளையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முதலாவது வீட்டின் உரிமையாளரான ராமமூர்;த்தி புலேந்திரன் (வயது36) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உதவிக்கு வந்த முன்வீட்டு இளைஞரான திருநாவுக்கரசு கிருபாகரனின் (இவர் புளொட் முக்கியஸ்தர் ஒருவரின் மைத்துனர்) காலிலும் துப்பாக்குச்சூடு விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட படுகாயம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவரின் காலை துண்டிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் பதற்றம் நிலவியுள்ளது. இத்திருடனுடன் பலர் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதானால் தொடர்ந்தும் பல கொள்ளைச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் பலரால் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ஆயுதம் தாங்கிவரும் திருடர்களான இவர்களிடமிருந்து எப்படி பாதுகாப்பு பெறுவதென்று தெரியாது மக்கள் திணறிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராணுவச் சீருடடையணிந்த கொள்ளையனின் துப்பாக்கிச் சூட்டில் வவுனியாவில் ஒருவர் பலி.. பணம் நகைகொள்ளை!

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் என்ற இடத்தில் நேற்றிரவு நேற்றிரவு 9 மணியளவில் இராணுவச் சீருடையை ஒத்த உடை ஒன்றில் சென்ற கொள்ளையன் ஒருவர் ஆயுதமுனையில் பணம் நகை என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளார் அவரைத் துரத்திப்பிடிக்க ஊரவர்கள் மூவர் முயன்ற போது கொள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார் மற்றுமொருவர் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ராமமூர்த்தி புலேந்திரன் (வயது36) என்பவர் துப்பாக்கிச்சூட்டு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவராவார் எனவும் படுகாயமடைந்தவர் திருநாவுக்கரசு கிருபாகரன் எனவும் தெரிவிக்கப்படுகிறது.; 1லட்சரூபாவுக்கு மேல் பணத்தையும் 26பவுண்நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர் இச்சம்பவத்தையடுத்து இப்பிரதேசத்தில் பதட்டநிலை தோன்றியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன இன்றுகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர் வவுனியா மாவட்ட நீதிபதி சம்பவ இடதத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்துள்ளார் குறிப்பிட்ட கொள்ளைக் காரனை இனம் காண்பதற்கு வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசா மறுப்பு

இலங்கைக்குச் செல்ல முற்பட்ட 2 கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்க விஸா வழங்க தூதரகம் மறுத்திருப்பதாகச் செய்திகள் வெளியகியுள்ளன மேற்படி கனடாவில் கான்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பற்றிக் பிரவுன் மற்றும் போல் கலன்ரிரா ஆகிய இருவருக்கும் விஸா மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் விஸா விண்ணப்பங்கள் ஏன் மறுக்கப்பட்டது? என்ற காரணத்தை இலங்கை தூதரகம் இன்னமும் தெரிவிக்கவில்லை இதுதொடர்பில் கனடா அரசாங்கம் ஊடாக நடவடிக்கை எடுக்க இரு எம்பிக்களுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளனர் இதுகுறித்து தமக்கு விளக்கமளிக்குமாறு கனடா அரசானது இலங்கை தூதரகத்தை கோரவுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சிலமாதங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து இலங்கை சென்றிருந்த மற்றுமொரு எம்பி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சில மணிநேரத்தின் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்களின் விதியை இந்தோனேசியா தீர்மானிக்கட்டும்.. அவுஸ்திரேலியா தெரிவிப்பு

இந்தோனேசியாவின் கடலில் வைத்து சென்ற ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 260 இலங்கைத் தமிழர்கள் குறித்த முடிவை இந்தோனேசிய அரசாங்கமே தீர்மானிக்கட்டும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அந்த மக்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது. ஆனால் படகிலுள்ள மக்கள் தாம் அவுஸ்திரேலியா செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் ஜூலியர் கிலார்ட் இந்தோனேசியாவில் வைத்துத் தான் இந்த மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் குறித்த தலைவிதியை தீர்மானிக்க வேண்டியது இந்தோனேசியா தான் இது இந்தோனேசியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவித்துள்ளாராம்.

50,000பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம். 620 கர்ப்பிணிகள் உட்பட்ட, 3260 பேர் நேற்று அனுப்பி வைப்பு

வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50000 பேரை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி முதற்கட்டமாக 620 கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட்ட 3260 பேர் 62 பஸ் வண்டிகளில் அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களது உடைமைகளை ஏற்றிச் செல்வதற்காக 27 பெரிய ரக லொறிகளும் பயன்படுத்தப் பட்டன என வவுனியா அரச அதிபர் திருமதி. பீ.எம்.எஸ்.சர்ள்ஸ் தெரிவித்துள்ளார். நேற்றுத் தொடக்கம் 2500-3000 வரையில் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நேற்று 620 கர்ப்பிணித் தாய்மார்கள் 12 பஸ் வண்டிகளிலும், அவர்களது உடைமைகள் 2 பெரிய லொறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏனைய 2500 பேரும் 50 பஸ் வண்டிகளிலும், அவர்களது உடைமைகள் 25 லொறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்றுக்காலை முதல் இவர்களைக் கட்டம் கட்டமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்றுக்காலையிலேயே முதல்கட்டமாக புறப்பட்டுச் சென்றனர். யாழ்.நகருக்கு ஏ9 பாதையூடாக செல்லும் இவர்களை யாழ் அரச அதிபர் கே.கணேஷ் பொறுப்பேற்பதுடன் அவர்களது சொந்த இடங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலகங்களுக்கும் கிராம சேவகர்களுக்கும் ஒப்படைக்கப்படுவார்கள் என்று வவுனியா அரசஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 5000 பேரும் விரைவில் குடியமர்த்தப் படவுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டங்களின் நிவாரண கிராமங்களிலுள்ள 4000 பேரும் குடியமர்த்தப் பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு ஏதுவாக நிலக்கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தீபாவளி நல் வாழ்த்துகள்


தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு கௌரவமான தீர்வு காணும்வரை தேசியகட்சிகளுடன் நாம் எந்த தேர்தலிலும் இணைந்து கொள்ளப்போவதில்லை


புளொட் ஜி-ரி-லிங்கநாதன்

1983ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த வாழ்க்கை நிலைக்கு நாம் திரும்ப வேண்டும் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களினது மீள்குடியேற்றத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் இவ்வாறு வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். வர்த்தகர்களுக்கு பல இடையூறுகள் வந்த போதிலும் அவர்கள் சமூகநலனில் அக்கறை கொண்டவர்களாக கடந்த காலத்தில் பல உதவிகளை வழங்கி வந்துள்ளனர் எனவும் சொன்னார். வர்த்தகசங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்தும் பேசுகையில்- கடந்த 30வருடகால விடுதலைப் போராட்டமானது இரண்டு இலட்சத்திற்கு அதிகமான மக்களை முள்ளுக்கம்பிகளுக்கு அடைத்து வைத்துள்ள நிலைக்கு கொண்டு வந்துள்ளது. 83க்கு முன்னர் போன்றதொரு இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும் வரி, கப்பம் கடத்தல் என்ற பேச்சுக்கு இடமிருக்க கூடாது. நான் புளொட் அமைப்பை சேர்ந்தவன் எங்களுடைய அமைப்பு கடந்த காலத்தில் சில தவறுகளை விட்டது. அந்த நிலை இனிமேலும் தொடராது. எமது அரசியல் பயணத்தில் நாம் எந்த தவறுகளையும் விட்டதில்லை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு கௌரவமான தீர்வு காணும்வரை தேசிய கட்சிகளுடன் நாம் எந்த தேர்தலிலும் இணைந்து கொள்ளப் போவதில்லை. மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடிய காரியங்களில் நகரசபை நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களுக்கும் நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம் நகர அபிவிருத்தியிலும் கவனம் செலுத்துவோம் என்றார். சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தலைவர் பி.எஸ்.அப்துல்லா, செயலாளர் எஸ்.சிறிஸ்கந்தராசா, உப தலைவர் கே.இராசலிங்கம், உட்பட பலர் உரையாற்றினார்கள்.



புதன், 14 அக்டோபர், 2009

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்கள் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தல்

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் (பெருமளவானோர் தமிழர்கள்) தாம் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர். வீடியோ இனைப்பு

அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் போது இந்தோனேஷிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர் தாம் கப்பலை வெடிக்க வைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தம்மைக் கப்பலில் இருந்து இந்தோனேஷியக் கடற்படையினர் இறக்க முற்பட்டால், தம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தியே பயணித்துள்ளனர். இந்நிலையில் கப்பலில் இருந்து தகவல் தந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அலெக்ஸ் என்பவர், தாம் யார் எனத் தெரிந்தால் இலங்கை அதிகாரிகள் தமது மனைவியையும் பிள்ளைகளையும் கொன்று விடுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவே பயணித்ததாகவும், இந்த நிலையில் இந்தோனேஷிய கடற்படையினர் தம்மைக் கப்பலில் இருந்து கீழே இறக்கினால் தாம் கப்பலை வெடிக்க வைப்பதாகவும், கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் எச்சரித்ததாகவும் கூறப்படுகின்றது.

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஈ.பி.டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சக மாணவர்கள் மீது தாக்குதல்.

ஈ.பி.டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கப்பம்கோரி சக மாணவர்களைத் தாக்கிய சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்- வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஈ.பி.டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அப்பாடசாலையில் க.பொ.த உயர்தரம், கணிதப் பிரிவில் பயிலும் சக மாணவர்கள் இருவரிடம் கப்பம் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது கப்பம் வழங்கப்படாத நிலையில் அவர்கள்மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கடும் காயங்களுக்குள்ளான இரு மாணவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈ.பி.டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களான றமணி, ரஜீவன், நிரோசன் சதீஸ், டினேஸ் உள்ளிட்ட ஆறுபேரே கப்பம் கோரி குறித்த இரு மாணவர்கள்மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்நடவடிக்கைக்கு ஈ.பி.டி.பி அமைப்பைச் சேர்ந்த காஸ்ரோ என்பவரின் மகனே தலைமை வகித்துள்ளார். பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள் சார்பாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் தாக்குதலை மேற்கொண்ட மாணவர்கள் அரசியல் கட்சியினைச் சார்ந்திருப்பதால் பொலீசார் இவ்விடயத்தில் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் விடயமாக மாறிவிட்டதென்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்தோனேசிய கடலில் மீட்கட்பட்ட இலங்கையர்களின் நிலைமைகள் பாதிப்பு

இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகளின் நிலைமை மிகவும் மோசமானதாக காணப்படுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நீண்ட நாட்களாக கடற்பிரயாணம் செய்த களைப்பில் இருப்பதாக இந்தோனேசிய கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைசெய்யப்பட்ட 260அகதிகளுள் 30பெண்களும், 30சிறுவர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது. இவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பயணிக்கும்போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்ப்பட்டவர்கள் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இவர்கள் பெரும்பாலும் நாளை விசாரணைகளின் பின்னர் இந்தோனேசிய இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கவைக்கப்படலாமெனவும் இந்தோனேசிய கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். முதலில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பின்னர் ஆட்கடத்தல் முகவர்களால் அவுஸ்திரேலியாவை நோக்கி கப்பலில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீண்டநாட்கள் கடற்பயணத்தினை மேற்கொண்டதால் உணவு மற்றும் நீர் இன்றி தவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்கள் படகுகளில் அவுஸ்திரேலியா வருவதை தடுக்குமாறு கெவின் ரூட் இந்தோனேசியாவிடம் கோரிக்கை


படகுகளில் பயணிக்கும் இலங்கைக் குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவை வந்தடைவதைத் தடுத்து நிறுத்துமாறு இந்தோனேசிய ஜனாதிபதியிடம் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விடயத்தில் இந்தோனேசியாவைத் தலையிடுமாறு தொலைபேசி மூலம் அவுஸ்திரேலியப் பிரதமர் கோரியுள்ளார். ஆட்களை சட்டவிரோதக் குடியேற்றங்களில் ஈடுபடுத்தும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலியா வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பாக இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங்க் யுதோயோனாவிடம் கலந்துரையாடியதாக கெவின் ரூட் கூறியுள்ளார். கரக்கட்டோவா கடற்பகுதியில் 30பெண்கள், 30சிறுவர்கள் உள்ளடங்களாக 260இலங்கைக் குடியேற்றவாசிகள் இந்தோனேசிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் கெவின் ரூட் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜேர்மனி D.P.L.F PLOTE கிளை அமைப்பாளர் ஜெகநாதன் இடைத்தங்கல் முதியோர்களுடன் சில நிமிடங்கள்..

ஜேர்மனி D.P.L.F PLOTE கிளை அமைப்பாளர் ஜெகநாதன் இடைத்தங்கல் முதியோர்களுடன் சில நிமிடங்கள்..
வீடியோ இனைப்பு
www.youtube.com/watch?v=3NfKPZK3IFI

இந்திய தூதுக்குழு ஜனாதிபதி சந்திப்பு!

தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியிடம் தெரிவிப்புவடக்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் கண்டறிவதற்காக இலங்கை வந்திருக்கும் தமிழக எம்.பிக்கள் குழு நேற்று (13) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியது.வடமாகாணத்தின் நிலை குறித்து பல்வேறு சிந்தனைகளுடன் வந்த தாம், அப்பகுதிகளுக்கு விஜயம் செய்ததன் மூலம் உண்மை நிலைகளை நேரில் கண்டறிந்து திருப்தியான மனோநிலையுடன் மீண்டும் நாடு திரும்புவதாக இந்த எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கூறினர்.வடக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து பார்வையிடுவதற்காக தம்மை இலங்கைக்கு அழைத்தமைக்காக அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்திய தமிழக எம்.பிக்கள் குழு அதற்காக அரசாங்கத்தினால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விடயங்களுக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்தது.நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் செயற்திட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். கொழும்பில் 65 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.பருவபெயர்ச்சி மழை ஆரம்பமாகும் போது நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழக எம்.பிக்கள் எடுத்துக் கூறினர். இதன்போது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டதும், தமிழக எம்.பிக்கள் திருப்தி தெரிவித்தனர்.இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி எதிர்வரும் இரு தினங்களுக்குள் நிவாரணக்கிராமங்களிலுள்ள பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகத் தெரிவித்தார்.தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை வந்து வடக்கின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தமைக்காக ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்

பாரிசில் கைதுசெய்யப்பட்டிருந்த 22 புலிச் சந்தேக நபர்களுக்கும் நீதிமன்றில்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் (ஏப்ரல் 2007) anti-terrorism unit - SDAT (Sous-direction Antiterroriste) of the French Interior Ministry, இனரால் பாரிஸில் கைது செய்யப்பட்டிருந்த புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர்களான றேகன், மேத்தா, உட்பட 22 பேர் நேற்று பிரான்ஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் கழகம் எனும் பெயரில் இயங்கிவந்த இவர்கள், பிராண்ஸ்வாழ் 75000 தமிழ் மக்களிடம் மாதாந்தம் 5 மில்லியன் யூரோக்களை கப்பமாக பெற்று வந்துள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளதுடன் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாரிய குற்றங்களை புரிந்தமை, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி புரிந்தமை, பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்காக நிதிசேசரித்தை போன்ற குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, Gilles Piquois அவர்கள் தமது கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டபோது, புலிகள் இயக்கம் 2007ம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்டிருக்கவில்லை என தெரிவித்திருந்தார். பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு நிதி சேகரிப்பு, அவ்வியக்கத்திற்கு நிதி வழங்கியுள்ளமை, அவ்வியக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணை நின்றமை போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாலேயே, சட்டத்தரணி, தனது கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டபோது புலிகள் இயக்கம், பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்டிருக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

இராணுவ அணிவகுப்பை ஏற்று இராணுவ நிகழ்வில் கலந்து கொள்ளும் எனது இறுதி சந்தர்ப்பமாக இருக்கலம் - சரத் பொன்சேகா!

இலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்நேரத்தில், முன்னைநாள் இராணுவ தளபதியும் தற்போதைய கூட்டுப்படைகளின் தளபதியுமான சரத் பொன்சேகாவை கௌரவிக்கும் முகமாக நேற்றையதினம் கொழும்பு இராணுவ தலைமையக மைதானத்தில் இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும்போதே பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.மிகுந்த அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் இந்நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதம் இராணுவ ரீதியில் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்காத வகையில் நீங்கள் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், பல்வேறு உயர் மட்டத்திலான அடைவுகளை சந்தித்தவனாக இராணுவ சேவைக்கான அர்ப்பணிப்புமிக்க எனது கடமைப்பாட்டை சரிவர நிறைவு செய்துள்ளேன். இந் நிலையில் இராணுவ அணிவகுப்பை ஏற்று இத்தகையதொரு நிகழ்வில் உரையாற்றுவது இதுவே எனது இறுதி சந்தர்ப்பமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்மோடு இருக்கும் எதிரிகள் யார்...? நண்பர்கள் யார்...?

சுயநலம் மனிதனோடு பிறந்தது. ஏதோ ஒருவகையில் எல்லோருடைய சிந்தனையிலும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. நான், எனது, என் குடும்பம், என் உறவுகள் என்ற எண்ணமும் செயற்பாடும் மனித சிந்தனையோடு மேலோங்கி நிற்கின்றது.இன்றைய அதிவேகமான வாழ்க்கைச் சூழ்நிலை, தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாளாந்த மனிதனின் வாழ்க்கையில் பல தாக்கங்களையும், பல மாறுதல்களையும் நாளுக்குநாள் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் பல மாறுபட்ட புதியபுதிய வழிகளில் தினமும் போராட வேண்டியுள்ளது.தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் நேர்மையோடு தன் கடுமையான உழைப்பால் முன்னேறும் மனிதனால் தான் சமூகத்தையும் பாதுகாக்க முடியும். அவனால் தான் இன்னொரு மனிதனுடைய உழைப்பையும், அவன் வாழ்க்கைச் சிரமத்தினையும் புரிந்து கொள்ள முடியும். வேலையெதுவும் இன்றி தொலைபேசியிலும், கம்பியூட்டரிலும், தொலைகாட்சி பார்ப்பதிலும் நேரத்தை கழித்துக் கொண்டு முற்போக்கு பேசிக் கொண்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்தைக் கூறி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்திக்; கொண்டிருக்கும் கூட்டம் புலம் பெயர் சமூகத்திலே அதிகரித்துள்ளது.இவர்கள் தங்களுடைய கடந்த கால தவறுகளை தவறென்று ஏற்றுக் கொள்ளாது பல காரணங்களை கூறி தங்களை நியாயப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். புலிகள் செய்த அதே தவறு ஆயுதமின்றி சிரிப்பிலும், மேடைப் பேச்சிலும் தங்களை தூய்மையானவர்களாக அடையாயம் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துகின்றார்கள்.எனது நண்பன்...எனது குடும்பத்தவன்… எனது உறவினன்.. எனது ஊர்க்காரன்… என்பதை விட்டுவிட்டு இவர்களுக்கு துணை போவதை உடனடியாக நிறுத்த வேண்டியது எங்கள் ஓவ்வொருவருடைய இன்றைய கடமையாகும். இன்னொரு மக்கள் விரோதக் கும்பலை வளர்த்தெடுப்பது நாங்கள் எங்கள் அப்பாவி மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். எங்களோடு இருக்கும் எதிரிகளை நாங்களே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.தங்கள் ஏமாற்று வித்தைகள் முன்தலைமுறையினரான பெற்றோர்கள் மத்தியில் பலிக்காது என்ற இன்றைய சூழலைப் புரிந்து கொண்டவர்கள் சிலர், இளையோர்கள்… இளம் சமூகம் என்று கூறிக் கொண்டு தங்கள் பெயரையும் புகழையும்…தங்கள் நலன் சார்ந்த நன்மைகளைக் கருத்தில் கொண்ட நவீன அரசியல்வாதிகள் பலர் இளைஞர்களை ஏமாற்றிப் பிழைப்பு நாடாத்த ஆரம்பித்துள்ளார்கள்.எங்கள் முன்னோரையும், எங்களையும் படுகுழிக்குள்ளே தள்ளிவிட்ட அன்றைய அரசியல்... இத்தனை ஆயிரம் மக்கள் அழிவு ஏற்பட புலிகளுக்கு அத்திவாரம் அமைத்துக் கொடுத்த அந்த வெள்ளை வேட்டி அரசியல் தான் இன்று புலம்பெயர் சமூகத்தில் கொள்கையிலே எந்த மாறுதலும் இல்லாமல் நவீன பிற்போக்கு அரசியலை தொடங்கியுள்ளது.இளைய சமூகத்தினரின் எதிர்காலத்தை சீரழிவுக்கு இட்டுச் செல்லும் இந்த தவறானஅரசியலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பும்… மற்றவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளாத தன்மையும்… எங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளாததும், அதை நியாயப்படுத்த முனைவதும்… நாங்கள் எங்களுக்கே தோண்டும் படுகுழியாகும்.தனிமனிதனுடைய வாழ்வில் மட்டுமல்லாது, மக்கள் நலன் சார்ந்து அமைக்கப்படும் அமைப்புக்களும் இதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஓவ்வொரு நாட்டிலும், ஒருவர் வாழும் நகரத்திலே அந்த சமூகத்தோடு அவர் எப்படி இருந்தார் என்பதை அறிந்து கொண்டு அவரை இணைத்துக் கொள்ள வேண்டும். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்பதற்காக தவறான ஒருவரை உள்வாங்கிக்கொள்வதால் பல மக்களுடைய ஆதரவை இழப்பதோடு அமைப்பையும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலைமை உருவாகிவிடும். எதிரிகளை நாங்களே அப்பாவி மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக் கூடாது. மிகவும் ஆழமான பார்வை கொண்டு கடந்தகாலத்தை புரிந்து செயற்பட வேண்டிய கடமை மக்கள் நலன் சார்ந்து செயற்படும் ஒவ்வொருவருக்கும் உண்டு.
மோஷே தியாகராஜா

இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனை போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை: ஜே.எம்.ஆரோன்

இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை என தமிழக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் ஜே.எம்.ஆரோன் தெரிவித்துள்ளார்.
வடக்கு இடம்பெயர் முகாம்களை நேரில் பார்வையிட்டதன் மூலம் தாம் இந்த உண்மையைக் கண்டறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் குடிநீர் மற்றும் மரக்கறி வகைகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என வவுனியா அரசாங்க அதிபர் தமக்கு உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விஜயத்தின் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கைத் தமிழ் இடம்பெயர் மக்கள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இதுவரையில் 800 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்ததும் வடக்கில் மாகாணசபைத் தேர்தல்: ஜனாதிபதி

வடக்கில் மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டதும் ஏனைய மாகாணங்களைப் போன்று அங்கும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.யாழ். மாநகர சபைக்கு ஐ.ம.சு.மு. சார்பில் தெரிவான உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் சொந்த இடம் செல்ல மிகுந்த விருப்பதுடன் இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னர், அப்பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். அதற்குத் தேவையான பெருமளவிலான இயந்திரங்களை நாம் வரவழைத்துள்ளோம். இவையனைத்தையும் நாம் பணம் கொடுத்தே பெற்றுக் கொண்டுள்ளோம். கண்டபடி குரலெழுப்பும் சர்வதேச சமூகத்திற்கு ஏன் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியாது? எனது மக்களுக்கு அநியாயம் இடம்பெறக் கூடாது. அவர்களை பாதுகாப்பது எனது பொறுப்பு மட்டுமல்லாமல் கடமையும் கூட. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவ ர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றோம். இதேவேளை, அவர்களது வாழ்வாதார தொழில்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்று கையில்,
உங்களுடைய யாழ்ப்பாணம் மாநகர சபையானது இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. யாழ். மக்கள் பல ஆண்டுகளாக இம்மாநகர சபையினூடாக பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுள்ளனர். யாழ். மாநகர சபையின் வாசிகசாலை யானது தெற்காசியவிலேயே சிறந்த வாசிகசாலையாக பெயர் பெற்றது. மிகவும் அரிதான பல நூல்கள் அதில் இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எரியூட்டினர். இது எதிர்கால பரம்பரையினருக்கே இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநியாயமாகும்.
கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக யாழ். மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். எல். ரி. ரி. ஈ.யினரால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளை எல்லோரும் அறிவர். யாழ்ப்பாண மேயராகவிருந்த அல்பிரட் துரையப்பா புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், இன்று எமது மக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை.
இன்று எமது நாட்டு மக்கள் எந்தவொரு பயமோ சந்தேகமோயின்றி சுதந்திரமாக வாழ முடியும். யுத்தம் முடிவடைந்ததும் நாம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நகர சபைக்கான தேர்தலை நடத்தினோம். வடக்கைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த ப்பட்டதும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாகா ணங்களில் போன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.
ஜனநாயகம் மீளவும் நிலை நாட்டப்பட வேண்டும். இடம்பெய ர்ந்திருக்கும் மக்களை மீளக்குடிய மர்த்தி வருகின்றோம். அவர்களும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல மிகுந்த விருப்பத்துடன் இரு க்கிறார்கள். அன்று தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். யாழ். தேவி ரயில் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தது.
நாமும் அந்தக் காலத்தில் யாழ். தேவியில் யாழ்ப்பாணத்துக்கு சென் றுள்ளோம். எமது தமிழ் நண்பர்க ளுடன் ஒன்றாக சேர்ந்து சந்தோ ஷமாக இருந்துள்ளோம்.
யாழ். தேவி மீண்டும் தொடர்ச்சி யான சேவையில் ஈடுபடுவதைப் பார்ப்பதற்காக வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஆவலுடன் காத்தி ருக்கிறார்கள். வடக்கின் பனை மரமும் தெற்கின் தென்னை மரமும் எப்படியாவது மீண்டும் ஒன்றிணையும். யாழ். மாநகர சபையின் உறுப்பினர்க ளாகிய நீங்கள் உங்களது பிரதேசங் களில் அபிவிருத்திகளை தொடர்ச்சி யாக முன்னெடுக்க வேண்டும்.
துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலைதூக்காத வகையில் பொதுமக்க ளுக்கு சேவை வழங்கப்பட வேண்டும். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான வேலைத் திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டு வருகின்றன. கல்வி, விவசாயம், மீன்பிடி அபிவிருத்தி, சுகாதாரம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகி ன்றன.
இளைஞர்களுக்கு நாளை வேலைத் திட்டத்தின் கீழ் மாண வர்களுக்கு கல்வி மற்றும் விளை யாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கின் வசந்தம் வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசி யம்.
வடக்கே யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையைச் சேர்ந்த லோகேந் திரன் ஸ்ரீகாசன் எனும் மாணவன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை யில் கூடிய புள்ளிகளைப் பெற்று இரண்டாவதாக வந்துள்ளார். அம் மாணவனுக்கு எனது வாழ்த்துக்கள். ஜாதி, இன, மத, குல பேதமின்றி நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல ஒற்றுமையாக வாழ வேண்டும்.
தென் மாகாண சபைத் தேர்தலில் நாம் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம்.
நாம் மக்களுக்கு சேவையாற்று வதற்காகவே இந்த பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளோம் என் பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
யாழ்ப்பாண மக்களுக்காக சேவை யாற்றுவதற்கு உங்களனைவருக்கும் திறமையும் சக்தியையும் கிடைக்கப் பெற வேண்டுமென நான் இறை வனை வேண்டுகிறேன் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரி வித்தார்.
யாழ். மேயர்
பல தசாப்தங்களாக சோகத்தில் வாழ்ந்து வந்த எமது மக்களுக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு மக்களுக்காக சேவை யாற்ற நாம் தயாரென்றும் ஜனா திபதி முன்னிலையில் யாழ். மாநகர சபையின் 23வது மேயராக நேற்று பதவியேற்றுக் கொண்ட பற்கு ணராஜா யோகேஸ்வரி தெரிவித்தார்.

டிஆர் பாலுவின் தகாத வார்த்தை பிரயோகங்களால் வவுனியா அரச அதிபர் அழுதார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட இலங்கை சென்றுள்ள இந்திய பாராளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள டிஆர் பாலுவின் வார்த்தைப் பிரயோகங்களால் வவுனியா மாவட்ட பிரதேச செயலர் திருமதி. சார்ள்ஸ் அவர்கள் கண்ணீர் விட்டழுததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தொலைபேசி ஊடாக கருத்து தெரிவித்த திருமதி. சார்ள்ஸ், இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற குழுவின் இடைத்தங்கல் முகாம்களுக்கான விஜயத்தின் நிகழ்சி நிரலில் தலையிடவேண்டாம் என டிஆர் பாலு கேட்டுக்கொண்டதாகவும், அவரது அதிகார தோரணையிலான பேச்சும் குரல் ஆழுத்தமும் தன்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் செய்தியில் இடைத்தங்கல் முகாம் ஒன்றிற்கு செல்லமுற்பட்ட டிஆர் பாலு குழுவினருடன், திருமதி சார்ள்ஸ் அவர்களும் செல்ல முற்பட்டபோது, இலங்கை அதிகாரிகளின் வழித்துணை தமக்கு அவசியம் இல்லை டிஆர் பாலு அவரை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது மிகவும் சிறப்பாக செயற்பட்டு அம்மக்களின் அன்றாட தேவைகளைக் கவனித்து திருமதி. சார்ள்ஸ் அவர்கள் தனது கடமையை செய்து வந்திருந்திருந்தார். இந்நிலையில் தமது அரசியல் தேவைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க இலங்கை வந்திருக்கும் டிஆர் பாலுவை இலங்கை அரசாங்கம் நாடுகடத்தாமை பலரதும் சிந்தனையை தூண்டியுள்ளது.

திங்கள், 12 அக்டோபர், 2009

வாழ்த்துகள்



14/10/2009 அன்று ஆறாவது ஆண்டில் கால் பதிக்க இருக்கம் அதிரடி இனைய தளத்திற்கு எமது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொழ்வதோடு அதிரடி இனையதளம் பல இன்னல்களுக்கு மத்தியில் வசகர்களுக்கு உண்மை செய்திகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் மிகுந்த் சிறமங்களுக்கு மத்தியில் பக்கசார்புகள் இல்லாமல் நடுநிலையான உண்மை செய்திகளை மாத்திரம் 5 து வருடங்களாக வழங்கி வரும் அதிரடி இனையதளம் எம்மை போன்ற புதிய இனையதளங்களுக்கு இடங்களைதந்து நாம் இனையதளங்களை உருவாக்கினால் அதிரடியை போல் செயற்பட வேண்டும் என்று முன்மாதிரியாக செயல்படும் அதிரடி இனையதளம் பல நூறு ஆண்டுகள் வழ்க அதன் சேவை எமது தமிழ் உள்ளங்களுக்கு தேவை தொடர்ந்தும் அதிரடி விரிவாக்கம் செய்ய பட்டு அதன் சேவை தொடர எமது வழ்த்துக்கள்

தமிழ் வாழும் வரை அதிரடி இவ் உலகில் வாழ வேண்டும் அதிரடியின் சேவை தமிழுக்கு தேவை

பூர்வீகம் இனையதளத்தின் சார்பாகவும் பூர்வீகம் வாசகர்கள் சார்பாகவும் அதிரடிக்கு எமது மனமார்ந்த வழ்த்துக்கள் வாழ்க அதிரடி வாழ்க அதிரடி இனைய ஒருங்கினைபாளர்கள்

ஜேர்மனி D.P.L.F PLOTE கிளை அமைப்பாளர் ஜெகநாதன் செஞ்சோலைச் சிறார்களுடன் உரையாடுகின்றார்.




வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த வந்த முதியோர்களை பாராமரிக்கும் வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் தர்மகர்த்தாவுடனும் முதியோர்களுடனும் செஞ்சோலைச் சிறார்களுடன் ஜெர்மனி D.P.L.F PLOTE கிளை அமைப்பாளர் ஜெகநாதன் உரையாடுகின்றார்.
வீடியோ இனைப்பு

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

நாடு கடந்த தமிழீழம்: எஞ்சிய தமிழினத்தை அழிக்கமுனையும், புலத்துப் புலிகளின் புலுடாப் பிரகடனம்

மக்களுக்கு எதிரான கடந்தகால புலிப் பாசிசத்தை, சுயவிமர்சனம் விமர்சனம் செய்யாத பாசிசத்துக்கான புதுப் புலுடாப் பிரகடனம். தமிழினத்தை தொடர்ந்து தமக்குள் அடிமையாக வைத்திருக்க, வலது பாசிட்டுகள் புலுடாப் பிரகடனம். ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களையும், ஓடுக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களையும், ஒடுக்கப்பட்ட உலக மக்களையும் சார்ந்து நின்று போராட மறுக்கும் வலதுசாரிய புலிப் பாசிசம், நாடு கடந்த தமிழீழ புலுடாப் பிரகடனத்தைச் செய்கின்றது.கடந்த காலத்தில் தமிழினத்தை அழித்த கும்பல், இன்று இதன் மூலம் தாம் வாழ நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.இதன் மூலம்
1. புலத்தில் பினாமிகளின் பெயரில் உள்ள பாரிய புலிச் சொத்துகளை, புலித் துரோகிகள் தமதாக்க புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.
2. தொடர்ந்தும் புலத்து மக்களை ஏமாற்றி, அவர்களிடம் பண அறுவடை செய்ய இந்த புலுடா தமிழீழப் பிரகடனம் உதவும் என்று நம்புகின்றனர்.
3. புலத்தில் தம் பாசிச அதிகாரத்தைக் தக்க வைக்க, அதைக் கொண்டு சமூகத்தை அடக்கிவைக்க, நாடு கடந்த புலுடாத் தமிழீழம் உதவும் என்று நம்புகின்றனர்.
4. புலித் தலைவரோ தன் மண்டையை தானே கொத்தக் கொடுத்து இறந்து விட்டார் என்பதை, மெதுவாக பலரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இனியும், புலத்து புலிக்கு தலைவர் கைகொடுக்கமாட்டார் என்ற அவலம். ஆகவே நாடு கடந்த தமிழீழம் மூலம், தமது வலதுசாரிய பாசிச அரசியல் இருப்பை தக்கவைக்க முனைகின்றனர்.
5. புலுடாத் தமிழீழப் பிரகடனம் மூலம், மக்களின் சுயமான சொந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்த இது உதவும் என்று கருதுகின்றனர். இதன் மூலம் மக்களை தமது சொந்த பாசித்துக்கும், இலங்கை அரச பாசிசத்துக்கும் அடிமையாக தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்று நம்புகின்றனர்.
இப்படி தமிழனை தொடர்ந்து ஏமாற்றவும், அவர்களை அடிமையாக வைத்திருக்கவும், நாடு கடந்த புலுடாத் தமிழீழம் உதவும் என்ற நம்பிக்கையில் தான், புலத்து புலிகள் இதை பிரகடனம் செய்கின்றனர். கடந்த காலத்தில் தமிழ் மக்களை அடித்தும் உதைத்தும் சுட்டும் பந்தாடிய புலிகள், அதற்காக ஒரு துளி கூட மனம் வருந்தியது கிடையாது. ஆனால் அந்த மக்களின் பெயரில் நாடு கடந்த தமிழீழப் பிரகடனம். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையே, ஒடுக்கியவர்கள் இந்தப் புலிகள். உலக மக்களை ஒடுக்கியவர்களுடன் சேர்ந்து தமிழீழம் என்றவர்கள், தம் சொந்த தலைவனுக்கே துரோகம் செய்தவர்கள், இன்று மீண்டும் இந்த புலுடாப் பிரகடனத்துடன் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யப் புறப்படுகின்றனர். இவர்கள் காட்டிக் கொடுக்காமல் புலித் தலைவர் சரணடையவில்லை. இவர்களின் காட்டிக்கொடுப்பின்றி, தன் உயிரை பிரபாகரன் இவ்வளவு இழிவான முறையில் இழந்திருக்க முடியாது. இவை எல்லாவற்றையும் திரைமறைவில் கன கச்சிதமாக செய்து முடித்தவர்கள் தான் இவர்கள். தாம் என்ன செய்தனர் என்பதையோ, என்ன நடந்தது என்பதைக் கூட, இந்த துரோகிகள் தமிழ் மக்களுக்கு சொல்லவில்லை. தம்மைச் சுற்றியுள்ள புலிச் சொத்தை, பினாமிகளிடமிருந்து பாதுகாக்க நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.தமிழ் மக்களின் பெயரில், மீண்டும் தமது வலதுசாரிய பாசிச வழியில் கொக்கரிக்க முனைகின்றனர். மண்ணில் மக்களை படாத பாடுபடுத்தி அழித்தவர்கள், அதன் மூலம் தங்கள் சுக போகங்களை அனுபவித்தவர்கள், தம் சொந்த அழிவின் மூலமே தாமாகவே அழிந்து போனார்கள். அந்தக் பாசிசக் கும்பலின் புலத்து எடுபிடிகளும், பினாமிகளும், உழையாது கிடைத்த சுகபோக வாழ்வை அனுபவிக்கவே இந்த நாடு கடந்த புலுடாத் தமிழீழத்தை பிரகடனம் செய்கின்றனர்.தமிழ் மக்கள் நலனே உங்கள் அரசியல் என்றால், நீங்கள் அந்த மக்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்கு பகிரங்கமான மன்னிப்பைக் கோருங்கள். அந்தப் பாசிச புலி அரசியலை வெளிப்படையாக அறிவித்து, அதைக் கைவிடுங்கள். அந்த மக்களை சுயமாக, தம் சொந்தக் காலில் சுயாதீனமாக போராட வழிவிடுங்கள். நீங்கள் உங்கள் வலதுசாரிய புலி அரசியலை விட்டுவிடுங்கள். ஆயுதத்தைக் கைவிட்டதாக கூறும் நீங்கள், உங்கள் பாசிச புலி அமைப்பையும் கலைத்து விடுங்கள். அதுமட்டும் தான், தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்மை. தமிழ் மக்கள் சுயமாக, தங்கள் விடிவிற்காக போராடும் புதிய அரசியல் வழிக்கு இது உதவும்.உங்கள் வலதுசாரிய புலிப்பாசிசம், தமிழினத்தை அழித்தது என்பதே எமது கடந்தகால வரலாறு. இன்னும் எஞ்சிய தமிழனையும் அழிக்கவா, இந்த நாடு கடந்த புலுடா தமிழீழப் பிரகடனம். 'நாய்க்கு ஏன் போர் தேங்காய்". தமிழனை நீங்கள் அழித்தது போதும். உங்கள் அரசியலை கைவிடுங்கள். உங்கள் வலதுசாரிய பாசிச அமைப்பைக் கலையுங்கள். மக்கள் தங்கள் சொந்த அரசியல் வழியை, சுயமாக தேர்ந்தெடுக்கவும் போராடவும் வழிவிடுங்கள்.

தென் மாகாணசபை தேர்தலில் ஜ.ம.சு.மு வெற்றியீட்டியுள்ளது!

தென் மாகாணசபைக்கு நேற்று இடம்பெற்ற தேர்தலில் 67.88 வீத வாக்குகளைபெற்று ஜ.ம.சு.மு 38 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. ஜ.தே.க. 25.09 வீத வாக்குகளைப்பெற்று 14 ஆசனங்களையும், ஜே.வி.பி 6.11 வீத வாக்குகளைபெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது என வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களிடம் றொபேர்ட் ஒ பிளெக் வேண்டுகோள்

இலங்கையினுள் தேசிய இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துதல் மற்றும் மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் பொருட்டு தமது நுட்பத்தையும் வளங்களையும் பயன்படுத்துமாறு அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலார் றொபேர்ட் ஒ பிளெக் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கின்ற இலங்கையர்களை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நீண்டகால சமாதானத்தின் பொருட்டு இலங்கை அரசாங்கம் சட்ட ஒழுங்கு மற்றும் அரசியல் இணக்கப்பாடு என்பவற்றை விரிவுபடுத்த வேண்டுமென அவர் கேட்டுள்ளார். அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றுக்காக இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் வாழ்கின்ற தமிழர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மடு திருத்தலத்திற்கு வாரத்தில் இருநாட்கள் சென்றுவர அனுமதி


மன்னார் மடு திருத்தலத்திற்கு வாரத்தில் இரு தினங்கள் பக்தர்கள் சென்று திரும்புவதற்கான விசேட அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக மடு திருத்தலத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. எனினும் கடந்தவருடம் மடுப் பிரதேசத்தில் பொலீஸ் நிலையம் திறக்கப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டதையடுத்து ஆலயத்தின் ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்தினுள் பக்தர்களின் நடமாட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பக்தர்கள் மடு திருத்தலம் சென்று திரும்ப முடியுமென பரிபாலகர் தெரிவித்துள்ளார். அத்துடன் மடு திருத்தலம் செல்வோர் எக்காரணம் கொண்டும் இரவில் அப்பகுதியில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய விண்ணப்பப் படிவங்கள் காரணமாக கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர்கள் விசனம்

கொழும்பு, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, வெள்ளவத்தை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, தெகிவளை, கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் தமிழர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் புதிய விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான விபரங்கள் இதில் பதிவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்தும் தமிழர்கள்மீது காட்டும் இதுபோன்ற சம்பவங்கள் அவர்களை விசனமடையச் செய்துள்ளது. அத்துடன் ஏற்கனவே பொலீஸ் பதிவு, வர்த்தகப்பதிவு போன்றன செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய பதிவானது என்ன நோக்கில் செய்யப்படுகின்றது என வர்த்தகர்கள் கேள்வியெழுப்புகின்றனர். இதுபோன்ற பதிவின்மூலம் பல்வேறு வகையிலான தொல்லைகள் ஏற்படுமென வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழுவினருக்கும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) தலைவர்களுக்கிடையிலுமான விசேட சந்திப்பு!!

இன்று இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருக்கும் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.ஸ்ரீதரன் ஆகியோர்க்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுமாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்த விசேட சந்திப்பானது சுமார் 45நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போதைய நாட்டின் நிலைமைகள் தொடர்பாக மேற்படி தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் மிகவும் ஆர்வமாக கட்டறிந்து கொண்டனர். தற்போதைய நிலைமைகள் மாத்திரமல்லாது கடந்த யுத்தத்தின்போது இடம்பெற்ற பிரச்சினைகள், யுத்தத்தின் தன்மைகள், அழிவுகள் பற்றியும் மிகவும் ஆழமாக இந்தியத் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது இன்று முதலாவது பிரச்சினையாகவிருக்கும் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்கின்ற மக்களை மீள வாழவைப்பது என்கிற பிரச்சினையை மேற்படி தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இந்தியத் தூதுக்குழுவினருக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். அத்துடன் தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளும், தமிழ்நாட்டு மக்களும் கடந்த காலங்களில் அதாவது 1980களில் தொடக்கம் தமிழ் மக்கள்பால் கொண்டுள்ள அக்கறைக்கும், அவர்களுக்கு வழங்கிவரும் உதவிகளுக்கும் இருவரும் நன்றி கூறிக் கொண்டார்கள். மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்து அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து அவர்;களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்குமாறும் இருவரும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் தூதுக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் இங்கே தரப்படுகின்றது….





வெள்ளி, 9 அக்டோபர், 2009

விவேக், சத்யராஜ், ஸ்ரீபிரியா விஜயக்குமார் கைதா?

விவேக், சத்யராஜ், ஸ்ரீபிரியா, விஜயகுமார் மீது கமிஷனரிடம் புகார்
ன்னை: பத்திரிகையாளர்களை மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் திட்டிய நடிகர்கள் விவேக், விஜய்குமார், சத்யராஜ், மற்றும் நடிகை ஸ்ரீபிரியாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சார்பில் இன்று மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
செவிபச்சாரம் செய்யும் நடிகைகள் என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்ட ஒரு செய்திக்காக, நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் அதன் செய்தி ஆசிரியர் லெனின், பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தினமலர் நாளிதழுக்கு கண்டனக் கூட்டம் என்று அறிவித்துவிட்டு, அனைத்துப் பத்திரிகையாளர்களையும் சகட்டு மேனிக்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர் கண்டனக் கூட்டத்துக்கு வந்த நடிகர் நடிகைகள்.
தவிர மேலும் சில பத்திரிகைகளின் பெயர்களைச் சொல்லி கடுமையாகத் திட்டினார். அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பொத்தாம் பொதுவாக ராஸ்கல்ஸ் என்றும் மேலும் சில கேவநடிகர் சூர்யா, ஒட்டு மொத்தப் பத்திரிகையாளர்களையும் ஆபாசத்தை விற்று வயிற்றைக் கழுவுபவர்கள் என்றதோடு, கடும் வார்த்தைகளைப் பிரயோகித்து கண்டனம் தெரிவித்தார். இயக்குநர் சேரன் பேசும்போது, தினமலர்லமான சொற்களையும் பிரயோகப்படுத்தி திட்டினார். ஸ்ரீபிரியா மற்றும் விவேக் இருவரும் ஆபாச வார்த்தைப் பிரயோகத்தின் உச்சத்துக்கே சென்றனர். பத்திரிக்கையாளர்கள் வீட்டு ஆயா முதல் மனைவி, மகள்கள் வரை அனைவரையும் மிகவும் ஆபாசமாக திட்டிப் பேசினார்.
கோபால், நடிகர் நடிகைகளுக்கு எதிராக தன்னிடம் உள்ள ஆதாரங்களைத் தருவதாகக் கூறியதோடு, மிகவும் ஆவேசமாக திரைத் துறையினர் மற்றுஇவை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்த செய்தியாளர்கள் இன்றைய பத்திரிகையாளர் கண்டனக் கூட்டத்தில் அதைப் போட்டுக் காட்டினர். அந்த காட்சிகளையெல்லாம் பார்த்து கொதித்துப் போனார்கள் பத்திரிகையாளர்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட நக்கீரன் ஆசிரியர்ம் காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டித்துப் பேசினார். தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகள், இணையதளங்கள், டிவி சேனல்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் குவிந்திருந்தனர். சாலை மறியல்..
க்கு எதிராகப் பேசிய அனைத்து நடிகர்களையும் கைது செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என பத்திரிகையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் வந்து கெஞ்சியும் கூட, போரமேலும் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரில் அனைத்துப் பத்திரிகையாளர்களும் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்க, ஆடிப் போனது மாநகர காவல்துறை. பத்திரிகையாளர்களுட்டத்தை வாபஸ் பெறவில்லை. தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது. பின்னர் மாநகர துணைக் கமிஷனர் கேட்டுக் கொண்டதன் பேரில் கமிஷனரிடம் புகார் தருவதென்று முடிவானது. கமிஷனரிடம் புகார்...
த்திரிகையாளர் லெனினைக் கைது செய்வதில் காட்டிய வேகத்தை, இந்த பத்திரிகையாளர்கள் புகார் மனு குறித்த நடவடிக்கையிலும் காட்ட வேண்டும் என்று உறுதியாகக் கூறினர் அனைத்துப் பத்திரிகை அமைப்புகளின் பிரதிநிதிகளும். தங்கஇதனைத் தொடர்ந்து ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் குழு, நடிகர்கள் விவேக், சத்யராஜ், விஜயக்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி மனு அளிக்கப்பட்டது. பள் புகாருக்கான வீடியோ ஆதாரத்தினையும் உடன் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேசிய ஆணையர் ராஜேந்திரன், செய்தி ஆசிரியர் லெனின் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தை பிரயோகப்படுத்த முகாந்திரம் இருந்தால், அதே சட்டம் இந்த நடிக, நடிகையர் மீதும் பிரயோகப்படுத்தப்படும். அதில் எந்த மாறுதலும் இல்லை என்று உறுதியளித்தார். கைதாவார்களா...?
இதைத் தொடர்ந்து மேற்கண்ட நான்கு நடிகர், நடிகையரும் கைதாவார்களா என்ற பரபரப்பு எழுந்துள்ளது

தேன் இயற்கை அளித்த மாமருந்து

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.
சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.
வயிற்றின் நண்பன் தேன்
வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என கூறுகின்றனர். ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.
இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்பாக்கம் அருகே வயலில் கிடந்த பண்டைய தங்க காசுகள்

கல்பாக்கம் கல்பாக்கம் அருகே வயலில் மாடு மேய்க்க சென்றவர் தங்க காசு புதையலை கண்டெடுத்தார். அவரை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குடிபேரம்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் நாயக்கருக்கு சொந்தமான நிலத்தை உழுதனர்.உழுது முடித்து ஆட்கள் சென்ற பின் தங்கராஜ் என்பவர் அந்த வயலுக்குச் சென்றார். அப்போது அங்கு தங்கக் காசுகள் சிதறிக் கிடந்தன.அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்ற தங்கராஜ், தந்தை வாசுதேவனிடம் கொடுத்தார். இந்த விஷயம் அப்பகுதியில் வேகமாக பரவியது.இதையடுத்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வயலில் குவிந்து பலரும் தங்க காசுகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது.தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸாரும், திருக்கழுக்குன்றம் தாசில்தார் கண்ணம்மாளும் வருவாய் துறை அதிகாரிகளுடன் குடிபேரம்பாக்கத்துக்கு விரைந்தனர்.வாசுதேவனிடம் இருந்து 5 தங்க காசுகள் கைப்பற்றப்பட்டு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த காசுகள் ஒவ்வொன்றும் சுமார் கால் பவுன் எடையுடன் இருந்தன.அநதக் காசுகளில் நாமம் வடிவ கோடுகள் உள்ளன. அவை புராதன தங்க நாணயங்கள் எனத் தெரியவந்துள்ளது. வேறு யார் யார் தங்க காசுகளை எடுத்து சென்றனர்என்று அதிகாரிகள் விசாரித்து

புதன், 7 அக்டோபர், 2009

மலேசியாவில் இலங்கை,மியன்மார் அகதிகளும் ,யு .என். எச் .சி .ஆர்(UNHCR) உம் . வீடியோ

மலேசிய UNHCR இன் பொறுபற்ற செயலும் மலேசிய அரசின் செயற்பாடும் அகதிகளின் கருத்தும் .

வீடியோவை பார்க்க இங்கே அழுத்தவும்
http://www.sbs.com.au/dateline/story/watch/id/600182/n/Malaysia-s-Crackdown

புளொட் தலைவர் சித்தார்த்தனது பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சித்தார்த்தன் அவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று நண்பகல் உடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திரு. சித்தார்த்தன் அவர்களது பாதுகாப்பிற்காக நான்கு பொலிஸார் நியமிக்கப்பட்டிருந்தனர், அவர்களில் ஒருவர் கடந்த 14 வருடங்களாக சித்தார்த்தன் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என தெரியவருகின்றது. அத்துடன் வடகிழக்கில் இயங்கிவரும் ஈபிஆர்எல்எப், புளொட் அமைப்பு காரியாலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தினசரி உணவாக அரைக் கிலோ மண் உண்ணும் இளைஞன்

கள்ளக்குறிச்சி: நாளாந்தம் உணவாக அரைக் கிலோ மண்னை சாப்பிட்டு வருகிறார் காய்கறிக்கடை வியாபாரி கோபி(வயது 25).
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். அத்துடன் ஏரிக் களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்.
விழுப்புர மாவட்டத்தையே விசித்திரத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது மூன்று வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தை கொண்டுள்ள கோபி தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோவுக்கு மேலான மண்ணை சேமித்து வைக்கிறõர். பின்பு அதை வைத்திருந்து நாள் முழுவதும் சாப்பிடுகிறார் இவ்வாறு சாப்பிடும் போது பெரிய கற்கள் தடைப்பட்டால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுவார்.
இது குறித்து கோபி கூறுகையில் "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின்பு, தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன். இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, மண்ணை சாப்பிட்டு கொண்டே தெரிவித்தார்.

ஈரோஸ் பிரபா பொலிஸாரால் தடுத்துவைப்பு ?

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த ஈரோஸ் அமைபிற்கு சொந்தமான வாகனம் சிங்களப் பிரதேசமொன்றில் சென்று கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரர் வண்டி ஒன்றுடன் மோதியதில் அவ்வண்டியில் பயணம்செய்த பொதுமக்கள் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஈரோஸ் இயக்கத்தின் வாகனச்சாரதிக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பதுடன் அவர் பொலிஸ் தடுத்துச் வைக்கப்பட்டுள்ளார். அவ்வாகனத்தில் பயணம் செய்த ஈரோஸ் பிரபாவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளாதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரிட்டிஷ் அமைச்சர் /போஸ்டர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

மன்னாருக்கும் சென்று நிலைமைகள் ஆராய்வு.சரணடைந்த புலிகளுடனும் கலந்துரையாடல்.இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபோஸ்டர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு முகாம்களுக்கு விஜயம் செய்தார்.சர்வதேச அபிவிருத்திக்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் மைக்ஃபோஸ்டர் நேற்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.எம். ஏ. ஜி. என்ற அமைப்பினர் நிலக்கண்ணி வெடி, மிதி வெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதிக்கும் சென்று அவற்றின் பணிகள் குறித்தும் ஆராய்வார். மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான முன்னேற்பாடுகளாக நடைபெறும் மிதிவெடிகள் அகற்றும் பணியின் முன்னேற்றங்கள் குறித்து கண்டறியும் அவர் மெனிக் பாஃம் வலயம் இரண்டுக்கும் விஜயம் செய்வார்.இங்கு பிரிட்டனின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வடிகாலமைப்பு மற்றும் சுகாதார சேவைகளின் நடவடிக்கை கள் பற்றியும் ஆராய்வார்.பிரிட்டனின் நிதி உதவியின் கீழ் இயங் கும் சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாம்களுக்கும் விஜயம் செய்தார். இறுதியாக பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு சென்ற அவரை அங்குள்ள சிறுவர், சிறுமியர்கள் வரவேற்ற னர்.சரணடைந்தவர்களுள் சிறுமிகள் மற்றும் யுவதிகளின் தையல் கண்காட்சிகளையும் பார்வையிட்டார். பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் மைக் போஸ்டருடன் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதுவர் கலாநிதி பீட்டர் ஹேய்ஸ் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர் தள்ளாடி முகாமுக்குச் சென்றார்.நன்றி தினகரன்

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் ஓருவர் சுட்டுக்கொலை.

பூந்தோட்டம் சீநகர் பிரதேசத்தில் சந்தேத்திற்கு இடமான மூவர் நடமாடியுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் அவர்களைச் சுற்றிவளைத்தபோது, ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை மக்களுக்கு காட்டி விரட்டி விட்டு, அம்மூவரும் அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளனர். சம்பவம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது அப்பிரதேசத்தை சுற்றி வளைத்த பொலிஸார் அம்மூவரையும் இனங்கண்டு அவர்களை அணுகிய போது, துப்பாக்கிதாரி பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோது, திருப்பி பொலிஸார் சுட்டதில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கிரேனேட் ஒன்றை பொலிஸார் மீது வீசியபோது, அக்குண்டு வெடிக்கவில்லை எனவும் அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேறிகளின் மத்தியில் புலிகளும் இருக்கலாம் என இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வல்கம்பாய குற்றச்சாட்டு

அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேறிகளின் மத்தியில் புலிகளும் இருக்கலாம் என, அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வல்கம்பாய தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அவுஸ்ரேலியாவின் உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ கோனர் மறுத்துள்ளார். இதன்காரணமாக அவுஸ்ரேலிய சமூகத்திற்குள் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தோன்றியுள்ளதாக வல்கம்பாய குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலத்தில் அவுஸ்ரேலியாவுக்குள் வந்த சட்டவிரோத குடியேறிகளின் மத்தியில் மோதல் சம்பவங்களில் காயங்கள் ஏற்பட்டவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இந்நிலையில் அவர்கள் புலிகளாக இருக்கலாம் என வல்கம்பாய குறிப்பிட்டுள்ளார். இவர்களை நாடுகடத்த வேண்டும் என கேட்டுள்ள அவர், இவர்களால் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை மறுத்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரண்டன் ஒக்கோனர், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகள் உரியமுறையில் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். கடந்த 12 மாதங்களாக மேற்கொண்ட பாதுகாப்பு சோதனைகளின்போது, எவரும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். படகுமூலம் வருபவர்கள் முதலில் சுகாதார பரிசோதனைகளுக்கும் அடையாள பரிசோதனைக்கும், பின்னர் பாதுகாப்பு சோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை தாம் மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்மஸ்தீவில் தாம் சட்டவிரோத குடியேறிகளை உரிய முறையில் பராமரிப்பதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் ஓருவர் சுட்டுக்கொலை.

பூந்தோட்டம் சீநகர் பிரதேசத்தில் சந்தேத்திற்கு இடமான மூவர் நடமாடியுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் அவர்களைச் சுற்றிவளைத்தபோது, ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை மக்களுக்கு காட்டி விரட்டி விட்டு, அம்மூவரும் அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளனர். சம்பவம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது அப்பிரதேசத்தை சுற்றி வளைத்த பொலிஸார் அம்மூவரையும் இனங்கண்டு அவர்களை அணுகிய போது, துப்பாக்கிதாரி பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோது, திருப்பி பொலிஸார் சுட்டதில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கிரேனேட் ஒன்றை பொலிஸார் மீது வீசியபோது, அக்குண்டு வெடிக்கவில்லை எனவும் அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

சனி, 3 அக்டோபர், 2009

கே. பி. யின் பெயரில் 600 வங்கிக் கணக்கு

புலிகளின் சர்வதேச தலைவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட குமரன் பத்மநாதன் - கே. பீ.யின் பெயரில் 600 இற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.அதனால், அவர் மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, நிர்க்கதியான மக்களுடன் புளொட் பிரதிநிதிகள் சந்திப்பு

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விண்ணப்பத்திருந்த கர்ப்பிணித் தாய்மார்கள், மற்றும் கைக் குழந்தைகளையுடைய தாய்மார்கள் உள்ளடங்கிய சுமார் 30குடும்பங்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா கச்சேரியில் வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இருந்தும் இவர்களுக்கான பயண ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் கடந்த 05நாட்களாக வவுனியா கச்சேரி, பஸ் நிலையம் என்பவற்றில் தங்கியிருந்தனர். இவர்களில் சில குடும்பங்கள் தமது சுய முயற்சியின் பயனாக தமது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளபோதிலும் பல குடும்பங்கள் தற்போது கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயில்குளம் சிவன்கோவில் பகுதியில் தங்கியுள்ள இம்மக்களைச் சந்தித்த புளொட் அமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டிய உதவிகள் குறித்தும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடலையும் மேற்கொண்டு குறித்த மக்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளைக் செய்ய ஆவனசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.