கள்ளக்குறிச்சி: நாளாந்தம் உணவாக அரைக் கிலோ மண்னை சாப்பிட்டு வருகிறார் காய்கறிக்கடை வியாபாரி கோபி(வயது 25).
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். அத்துடன் ஏரிக் களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்.
விழுப்புர மாவட்டத்தையே விசித்திரத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது மூன்று வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தை கொண்டுள்ள கோபி தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோவுக்கு மேலான மண்ணை சேமித்து வைக்கிறõர். பின்பு அதை வைத்திருந்து நாள் முழுவதும் சாப்பிடுகிறார் இவ்வாறு சாப்பிடும் போது பெரிய கற்கள் தடைப்பட்டால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுவார்.
இது குறித்து கோபி கூறுகையில் "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின்பு, தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன். இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, மண்ணை சாப்பிட்டு கொண்டே தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக