படகுகளில் பயணிக்கும் இலங்கைக் குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவை வந்தடைவதைத் தடுத்து நிறுத்துமாறு இந்தோனேசிய ஜனாதிபதியிடம் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விடயத்தில் இந்தோனேசியாவைத் தலையிடுமாறு தொலைபேசி மூலம் அவுஸ்திரேலியப் பிரதமர் கோரியுள்ளார். ஆட்களை சட்டவிரோதக் குடியேற்றங்களில் ஈடுபடுத்தும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலியா வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பாக இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங்க் யுதோயோனாவிடம் கலந்துரையாடியதாக கெவின் ரூட் கூறியுள்ளார். கரக்கட்டோவா கடற்பகுதியில் 30பெண்கள், 30சிறுவர்கள் உள்ளடங்களாக 260இலங்கைக் குடியேற்றவாசிகள் இந்தோனேசிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் கெவின் ரூட் சுட்டிக்காட்டியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக