அரசியல் தலைமைகளும் அரச சேவையில் பணியாற்றுவோரும் நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுவதன் மூலம் சகலரும் எதிர்பார்க்கும் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறந்த அரச சேவை நாட்டுக்குள் முன்னெடுத்து செல்லவது அனைவரதும் கடமை. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் கைப்பாவைகளாக செயற்படாத அரச சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி தனது செயலகத்தில் இன்று கடமையை பொறுபேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
காலத்தின் தேவைக்கு அமைய நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரத்தையும் நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மன்னன் அல்ல ஊழியன் என்று கருதி செயற்படுதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக