ஞாயிறு, 11 அக்டோபர், 2009

இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழுவினருக்கும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) தலைவர்களுக்கிடையிலுமான விசேட சந்திப்பு!!

இன்று இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருக்கும் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.ஸ்ரீதரன் ஆகியோர்க்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுமாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்த விசேட சந்திப்பானது சுமார் 45நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போதைய நாட்டின் நிலைமைகள் தொடர்பாக மேற்படி தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் மிகவும் ஆர்வமாக கட்டறிந்து கொண்டனர். தற்போதைய நிலைமைகள் மாத்திரமல்லாது கடந்த யுத்தத்தின்போது இடம்பெற்ற பிரச்சினைகள், யுத்தத்தின் தன்மைகள், அழிவுகள் பற்றியும் மிகவும் ஆழமாக இந்தியத் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது இன்று முதலாவது பிரச்சினையாகவிருக்கும் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்கின்ற மக்களை மீள வாழவைப்பது என்கிற பிரச்சினையை மேற்படி தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இந்தியத் தூதுக்குழுவினருக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். அத்துடன் தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளும், தமிழ்நாட்டு மக்களும் கடந்த காலங்களில் அதாவது 1980களில் தொடக்கம் தமிழ் மக்கள்பால் கொண்டுள்ள அக்கறைக்கும், அவர்களுக்கு வழங்கிவரும் உதவிகளுக்கும் இருவரும் நன்றி கூறிக் கொண்டார்கள். மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்து அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து அவர்;களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்குமாறும் இருவரும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் தூதுக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் இங்கே தரப்படுகின்றது….





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக