புதன், 14 அக்டோபர், 2009

இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பலில் உள்ளவர்கள் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தல்

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர்கள் (பெருமளவானோர் தமிழர்கள்) தாம் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர். வீடியோ இனைப்பு

அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் போது இந்தோனேஷிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள இலங்கையர் தாம் கப்பலை வெடிக்க வைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தம்மைக் கப்பலில் இருந்து இந்தோனேஷியக் கடற்படையினர் இறக்க முற்பட்டால், தம் வசம் உள்ள சிலிண்டர்களை வெடிக்க வைக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பலில் பயணித்த, ஒவ்வொருவரும், தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முகவர்களிடம் செலுத்தியே பயணித்துள்ளனர். இந்நிலையில் கப்பலில் இருந்து தகவல் தந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அலெக்ஸ் என்பவர், தாம் யார் எனத் தெரிந்தால் இலங்கை அதிகாரிகள் தமது மனைவியையும் பிள்ளைகளையும் கொன்று விடுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவே பயணித்ததாகவும், இந்த நிலையில் இந்தோனேஷிய கடற்படையினர் தம்மைக் கப்பலில் இருந்து கீழே இறக்கினால் தாம் கப்பலை வெடிக்க வைப்பதாகவும், கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் எச்சரித்ததாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக