ஞாயிறு, 11 அக்டோபர், 2009

நாடு கடந்த தமிழீழம்: எஞ்சிய தமிழினத்தை அழிக்கமுனையும், புலத்துப் புலிகளின் புலுடாப் பிரகடனம்

மக்களுக்கு எதிரான கடந்தகால புலிப் பாசிசத்தை, சுயவிமர்சனம் விமர்சனம் செய்யாத பாசிசத்துக்கான புதுப் புலுடாப் பிரகடனம். தமிழினத்தை தொடர்ந்து தமக்குள் அடிமையாக வைத்திருக்க, வலது பாசிட்டுகள் புலுடாப் பிரகடனம். ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களையும், ஓடுக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களையும், ஒடுக்கப்பட்ட உலக மக்களையும் சார்ந்து நின்று போராட மறுக்கும் வலதுசாரிய புலிப் பாசிசம், நாடு கடந்த தமிழீழ புலுடாப் பிரகடனத்தைச் செய்கின்றது.கடந்த காலத்தில் தமிழினத்தை அழித்த கும்பல், இன்று இதன் மூலம் தாம் வாழ நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.இதன் மூலம்
1. புலத்தில் பினாமிகளின் பெயரில் உள்ள பாரிய புலிச் சொத்துகளை, புலித் துரோகிகள் தமதாக்க புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.
2. தொடர்ந்தும் புலத்து மக்களை ஏமாற்றி, அவர்களிடம் பண அறுவடை செய்ய இந்த புலுடா தமிழீழப் பிரகடனம் உதவும் என்று நம்புகின்றனர்.
3. புலத்தில் தம் பாசிச அதிகாரத்தைக் தக்க வைக்க, அதைக் கொண்டு சமூகத்தை அடக்கிவைக்க, நாடு கடந்த புலுடாத் தமிழீழம் உதவும் என்று நம்புகின்றனர்.
4. புலித் தலைவரோ தன் மண்டையை தானே கொத்தக் கொடுத்து இறந்து விட்டார் என்பதை, மெதுவாக பலரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இனியும், புலத்து புலிக்கு தலைவர் கைகொடுக்கமாட்டார் என்ற அவலம். ஆகவே நாடு கடந்த தமிழீழம் மூலம், தமது வலதுசாரிய பாசிச அரசியல் இருப்பை தக்கவைக்க முனைகின்றனர்.
5. புலுடாத் தமிழீழப் பிரகடனம் மூலம், மக்களின் சுயமான சொந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்த இது உதவும் என்று கருதுகின்றனர். இதன் மூலம் மக்களை தமது சொந்த பாசித்துக்கும், இலங்கை அரச பாசிசத்துக்கும் அடிமையாக தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்று நம்புகின்றனர்.
இப்படி தமிழனை தொடர்ந்து ஏமாற்றவும், அவர்களை அடிமையாக வைத்திருக்கவும், நாடு கடந்த புலுடாத் தமிழீழம் உதவும் என்ற நம்பிக்கையில் தான், புலத்து புலிகள் இதை பிரகடனம் செய்கின்றனர். கடந்த காலத்தில் தமிழ் மக்களை அடித்தும் உதைத்தும் சுட்டும் பந்தாடிய புலிகள், அதற்காக ஒரு துளி கூட மனம் வருந்தியது கிடையாது. ஆனால் அந்த மக்களின் பெயரில் நாடு கடந்த தமிழீழப் பிரகடனம். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையே, ஒடுக்கியவர்கள் இந்தப் புலிகள். உலக மக்களை ஒடுக்கியவர்களுடன் சேர்ந்து தமிழீழம் என்றவர்கள், தம் சொந்த தலைவனுக்கே துரோகம் செய்தவர்கள், இன்று மீண்டும் இந்த புலுடாப் பிரகடனத்துடன் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யப் புறப்படுகின்றனர். இவர்கள் காட்டிக் கொடுக்காமல் புலித் தலைவர் சரணடையவில்லை. இவர்களின் காட்டிக்கொடுப்பின்றி, தன் உயிரை பிரபாகரன் இவ்வளவு இழிவான முறையில் இழந்திருக்க முடியாது. இவை எல்லாவற்றையும் திரைமறைவில் கன கச்சிதமாக செய்து முடித்தவர்கள் தான் இவர்கள். தாம் என்ன செய்தனர் என்பதையோ, என்ன நடந்தது என்பதைக் கூட, இந்த துரோகிகள் தமிழ் மக்களுக்கு சொல்லவில்லை. தம்மைச் சுற்றியுள்ள புலிச் சொத்தை, பினாமிகளிடமிருந்து பாதுகாக்க நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.தமிழ் மக்களின் பெயரில், மீண்டும் தமது வலதுசாரிய பாசிச வழியில் கொக்கரிக்க முனைகின்றனர். மண்ணில் மக்களை படாத பாடுபடுத்தி அழித்தவர்கள், அதன் மூலம் தங்கள் சுக போகங்களை அனுபவித்தவர்கள், தம் சொந்த அழிவின் மூலமே தாமாகவே அழிந்து போனார்கள். அந்தக் பாசிசக் கும்பலின் புலத்து எடுபிடிகளும், பினாமிகளும், உழையாது கிடைத்த சுகபோக வாழ்வை அனுபவிக்கவே இந்த நாடு கடந்த புலுடாத் தமிழீழத்தை பிரகடனம் செய்கின்றனர்.தமிழ் மக்கள் நலனே உங்கள் அரசியல் என்றால், நீங்கள் அந்த மக்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்கு பகிரங்கமான மன்னிப்பைக் கோருங்கள். அந்தப் பாசிச புலி அரசியலை வெளிப்படையாக அறிவித்து, அதைக் கைவிடுங்கள். அந்த மக்களை சுயமாக, தம் சொந்தக் காலில் சுயாதீனமாக போராட வழிவிடுங்கள். நீங்கள் உங்கள் வலதுசாரிய புலி அரசியலை விட்டுவிடுங்கள். ஆயுதத்தைக் கைவிட்டதாக கூறும் நீங்கள், உங்கள் பாசிச புலி அமைப்பையும் கலைத்து விடுங்கள். அதுமட்டும் தான், தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்மை. தமிழ் மக்கள் சுயமாக, தங்கள் விடிவிற்காக போராடும் புதிய அரசியல் வழிக்கு இது உதவும்.உங்கள் வலதுசாரிய புலிப்பாசிசம், தமிழினத்தை அழித்தது என்பதே எமது கடந்தகால வரலாறு. இன்னும் எஞ்சிய தமிழனையும் அழிக்கவா, இந்த நாடு கடந்த புலுடா தமிழீழப் பிரகடனம். 'நாய்க்கு ஏன் போர் தேங்காய்". தமிழனை நீங்கள் அழித்தது போதும். உங்கள் அரசியலை கைவிடுங்கள். உங்கள் வலதுசாரிய பாசிச அமைப்பைக் கலையுங்கள். மக்கள் தங்கள் சொந்த அரசியல் வழியை, சுயமாக தேர்ந்தெடுக்கவும் போராடவும் வழிவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக