கிளிநொச்சி இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தோர் விரும்பினால் அவர்களை அங்கு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது, கடந்த கூட்டத்தில் கோரப்பட்ட மீள்குடியேற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. பூநகரி பிரதேச செயலர் சத்தியசீலன், இரணைதீவு மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியேற விரும்புகின்றனர் எனக் கூட்டத்தில் தெரிவித்தார். 1992 ஆம் ஆண்டு நாட்டின் அசாதாரண
சூழ்நிலை காரணமாக 183 குடும்பங்கள் இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தன.
இந்தக் குடும்பங்கள் இரணைமாதா நகரில் குடியேற்றப்பட்டன. தற்போது அங்கு 314 குடும்பங்கள் உள்ளன. இந்தக் குடும்பங்களில் 220 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களை அண்மையில் சந்தித்த போது, தமது தொழில் நடவடிக்கைகளுக்காக இரணைதீவுக்குச் சென்று குடியேற விரும்புகிறார்கள் என அந்த மக்கள் தெரிவித்தனர் என்று பூநகரி பிரதேச செயலர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சொந்த இடத்தில் மீள்குடியேறுவதற்கும் தொழில் செய்வதற்கும் அந்த மக்கள் விரும்பினால் அவர்களை அங்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த விடயங்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், மு.சந்திரகுமார் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக