புலிகளின் பொய் பரப்புரையூடகங்களாக பல ஆண்டுகாலம் இயங்கி வந்த தமிழ்நாதம், புதினம் ஆகிய இரு இணையதளங்களும் 18.10.09 ஞாயிற்றுக்கிழமை அன்று (புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு சரியாக ஐந்து மாதங்கள் கடந்து) அகால மரணமடைந்துள்ளன. இவ் அறிவித்தலை அனைத்து ஈழநாதம், புதினம் வாசகர்களுக்கும் ஆழ்ந்த மனவருத்ததுடன் அறியத் தருகின்றோம். இந்த இரு இணையத்தளங்களும் இறந்த செய்தி கேட்டு இவர்களுடன் இணைப்பிலிருந்த அனைத்து “ஒட்டுண்ணி” ஊடகத்தினரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்து மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது. இந்த இரு இணையதளங்களுக்கும் வன்னிக்களத்திலிருந்து நேரடியாக ‘பொய்” செய்திகளை வழங்கி கொண்டிருந்த செய்திநிருபரான “புதினப் பொய்யர்” என்பவர் முள்ளிவாய்கால் பிரதேசத்தில் வைத்து தேசிய தலைவருடன் சேர்ந்து தேசத்துரோகமாக யாருக்கும் சொல்லாமல் கொள்லாமல் கடந்த மே மாதம் 16திகதி படையினரிடம் சரணடைந்ததால் கடந்த நாலு, ஐந்து மாதங்களாக “பொய்” செய்திகள் எதுவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த இவ் இரு இணையதளங்களும் திடீர் என்று தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
வேறு ஒரு செய்தியூடக தகவலின்படி இந்த இணையதளங்களை இயக்கிய உரிமையாளர்கள் சிறிலங்கா புலனாய்வு துறையினரால் கைது செய்யபட்டு கொழும்புக்கு கொண்டு செல்லபட்டதாகவும் அறிய முடிகிறது. கே.பி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் புலிகள் சார்பாக வெளிநாடுகளில் இயங்கிய பல முக்கியஸ்தர்கள் ஏற்கனவே கைது செய்யபட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் விபரங்களை புலிகளமைப்பினர் மறைக்க முற்பட்டாலும் அவர்களின் முழுவிபரங்களும் வெகுவிரைவில் வெளியிடப்படலாம் என கொழும்பிலிருக்கும் புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
நன்றி அதிரடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக