மன்னார் மடு திருத்தலத்திற்கு வாரத்தில் இரு தினங்கள் பக்தர்கள் சென்று திரும்புவதற்கான விசேட அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக மடு திருத்தலத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. எனினும் கடந்தவருடம் மடுப் பிரதேசத்தில் பொலீஸ் நிலையம் திறக்கப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டதையடுத்து ஆலயத்தின் ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டத்தினுள் பக்தர்களின் நடமாட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பக்தர்கள் மடு திருத்தலம் சென்று திரும்ப முடியுமென பரிபாலகர் தெரிவித்துள்ளார். அத்துடன் மடு திருத்தலம் செல்வோர் எக்காரணம் கொண்டும் இரவில் அப்பகுதியில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக