செவ்வாய், 13 அக்டோபர், 2009
இராணுவ அணிவகுப்பை ஏற்று இராணுவ நிகழ்வில் கலந்து கொள்ளும் எனது இறுதி சந்தர்ப்பமாக இருக்கலம் - சரத் பொன்சேகா!
இலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்நேரத்தில், முன்னைநாள் இராணுவ தளபதியும் தற்போதைய கூட்டுப்படைகளின் தளபதியுமான சரத் பொன்சேகாவை கௌரவிக்கும் முகமாக நேற்றையதினம் கொழும்பு இராணுவ தலைமையக மைதானத்தில் இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும்போதே பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.மிகுந்த அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் இந்நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதம் இராணுவ ரீதியில் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தலை தூக்காத வகையில் நீங்கள் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், பல்வேறு உயர் மட்டத்திலான அடைவுகளை சந்தித்தவனாக இராணுவ சேவைக்கான அர்ப்பணிப்புமிக்க எனது கடமைப்பாட்டை சரிவர நிறைவு செய்துள்ளேன். இந் நிலையில் இராணுவ அணிவகுப்பை ஏற்று இத்தகையதொரு நிகழ்வில் உரையாற்றுவது இதுவே எனது இறுதி சந்தர்ப்பமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக