இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை என தமிழக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் ஜே.எம்.ஆரோன் தெரிவித்துள்ளார்.
வடக்கு இடம்பெயர் முகாம்களை நேரில் பார்வையிட்டதன் மூலம் தாம் இந்த உண்மையைக் கண்டறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் குடிநீர் மற்றும் மரக்கறி வகைகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என வவுனியா அரசாங்க அதிபர் தமக்கு உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விஜயத்தின் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கைத் தமிழ் இடம்பெயர் மக்கள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இதுவரையில் 800 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக