சனி, 24 அக்டோபர், 2009

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியில்புலிகளின் திருட்டை மடக்கி பிடிக்க முயன்ற மற்றைய பொதுமகனும் இன்று மரணமானார்!

திருட்டில் ஈடுபட்ட புலிகளை பிடிக்க முயன்றபோது புலிகளின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபர் இன்றையதினம் மரணமானார். கடந்த 17ம் திகதி வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் ஜந்துக்கு மேற்பட்ட வீடுகளில் பணம், நகை என்பனவற்றை புலிகள் திருடிக் கொண்டு ஆறாவது வீட்டிற்குள் புக முயன்றபோது அவ் வீட்டில் உள்ளவர்கள் குரல் எழுப்பியதை தொடர்ந்து அயலர்வர்கள் திருடர்களை துரத்திசென்றபோது திருட்டில் ஈடுபட்ட புலி கும்பல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 36வயதுடைய ராமமூர்த்தி புலேந்திரன் என்ற பொதுமகன் கொல்லப்பட்டும், திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவர் படுகாயமடைந்தார்.வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டதுடன், தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் இருந்த கிருபாகரன் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். மேற்படி திருட்டில் ஈடுபட்டவர்கள் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களே கடந்த காலங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும், இவ்வாறான திருட்டு, கொலை, கொள்ளை, கப்பம் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த புலிகளின் பெண் ஒருவர் உட்பட நால்வர் நேற்றையதினம் வவுனியாவில் வைத்து விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை என்ற பெயரில் புலிகள் கடந்த காலங்களில் இவ்வாறு பல சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக