புதன், 14 அக்டோபர், 2009

இந்தோனேசிய கடலில் மீட்கட்பட்ட இலங்கையர்களின் நிலைமைகள் பாதிப்பு

இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகளின் நிலைமை மிகவும் மோசமானதாக காணப்படுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நீண்ட நாட்களாக கடற்பிரயாணம் செய்த களைப்பில் இருப்பதாக இந்தோனேசிய கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைசெய்யப்பட்ட 260அகதிகளுள் 30பெண்களும், 30சிறுவர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது. இவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பயணிக்கும்போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்ப்பட்டவர்கள் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இவர்கள் பெரும்பாலும் நாளை விசாரணைகளின் பின்னர் இந்தோனேசிய இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கவைக்கப்படலாமெனவும் இந்தோனேசிய கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். முதலில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பின்னர் ஆட்கடத்தல் முகவர்களால் அவுஸ்திரேலியாவை நோக்கி கப்பலில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீண்டநாட்கள் கடற்பயணத்தினை மேற்கொண்டதால் உணவு மற்றும் நீர் இன்றி தவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக