திங்கள், 19 அக்டோபர், 2009
இலங்கைக்கு மேலும் ரூ. 500 கோடி வழங்க இந்திய அரசு தீர்மானம்
இலங்கைத் தமிழர்களின் ‘மறுவாழ்வுக் கென மேலும் 500 கோடி ரூபாவை வழங்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதென மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.இது குறித்த திட்ட அறிக்கை இலங்கை அரசிடமிருந்து கிடைத்ததும் நிதி ஒதுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.அமைச்சர் சிதம்பரம் நேற்றுக் காலை 9.00 மணிக்கு கோபாலபுரம் சென்று முதல் அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இருவரும் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்புக்கு பிறகு ப. சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது, அண்மை யில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று நிவாரணக் கிராமங்களில் தமிழர்களை சந்தித்து பேசி நிலவரங்களை அறிந்து வந்திருந்தனர். ஆய்வறிக்கையும் வழங்கினர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்தேன். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தும் பேசினோம்.முதல் அமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை 5 ஆயிரம் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடக்கம் என்பதால் மெதுவாக உள்ளது போகப் போக அனைவரும் குடியமர்த்தப்படுவார்கள். இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ. 500 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. மீண்டும் ரூ. 500 கோடி வழங்க தயாராக உள்ளது.இது குறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு நிதி ஒதுக்குவோம் என்றார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக