ஞாயிறு, 18 அக்டோபர், 2009

‘பிரபாகரன் படத்துக்கு மாலை அணிவிக்கப்படும் - குழப்பமடையவேண்டாம்!’

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்தின உரை இம்முறை நடைபெறாது என்ற போதும் பிரபாகரனுக்கான அக(புற) வணக்கத்தை செலுத்துவதற்கு வெளிநாட்டு புலிப்பினாமிகள் தயாராகி வருகின்றார்கள். இதன் முன்னோட்டமாக தமது மேல்மட்ட ஆதரவு தளத்தில், ‘இம்முறை பிரபாகரனுக்கு மாலை அணுவிக்கப்போகிறோம் யாரும் குழப்பமடையவேண்டாம்’ எனக் கோரப்பட்டுள்ளனர்.கறுப்பு ‘சேட்’ போட்டவனெல்லாம் தந்தை பெரியாராகிவிட முடியும் என்று இந்தியாவில் மனப்பால் குடிக்கும் கூட்டம் இந்தத் தகவலையடுத்து பெரும் குழப்பமடைந்துள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான், அனுமான் “கண்டேன் சீதையை” என்று இராமனுக்கு உரைத்ததுபோல சீமான் “கண்டேன் பிரபாகரனை” என்று கதைவிடுகிறார். வெள்ளை உடையணிந்த கறுப்புள்ளம் கொண்ட பாதிரி ஜெகத் ஜெஸ்பாரும் தன் பங்குக்கு ‘நான் கிளிநொச்சி நோக்கி வருவேன்’ என பிரபாகரனே கூறியதாக தனது இணையத்தளத்தில் றீல் விட்டும் புலி ஊடகங்களே கண்டுகொள்ளவில்லை.தமிழர் போராட்டம் என்று அநியாயமாக இளைஞர்கள், யுவதிகள், சிறுவர் - சிறுமியரைப் பலிகொடுத்துவிட்டு அவர்களின் பெயரால் மாவீரர் உரை. அதுவும் தனது பிறந்த நாளுக்கும் மாவீரர்களின் இறந்த நாளுக்கும் பாலம் அமைத்து பிரபாகரனின் உரை.இந்தக் கொடுமை போதாதென்று அந்த பிதட்டலுக்கு கனடா சேரனில் இருந்து கொழும்பு கா. சிவத்தம்பி வரை பொழிப்பு எழுதுவார்கள். தற்குறி தமிழ் ஊடகங்கள் தொடக்கம் தறிகெட்ட ஊடகவியலாளர்கள் வரை ஒரே புலம்பல்தான்.இம்முறையுடன் அது நடக்காது. அதற்குப் பதிலாக பிரபாகரனுக்கு மாலை அணிவிக்கப்படும். மாலை அணிவித்தது பிழை - சரி என்ற வாதம் எழலாம். அல்லது மாலை அணிவிப்பதற்கு யார் யாருக்கு தகுதி இருக்கு என்று விவாதம் எழலாம். இவ்வாறு சமூகத்துக்கும் அறிவியலுக்கும் உதவக்கூடிய விவாதத்தை தமிழ்கூறும் நல்லுலகு காணும். இவ்வாறான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது எமக்கெல்லாம் பெருமைதானே!இதில் வேடிக்கையென்னவென்றால், தமிழீழம் வேண்டிப் போராடிய மண்ணில் பிரபாகரனின் படத்துக்கு யார் மாலைபோடுவது? அட பிரபாகரனின் படத்தையாவது யாராவது வைப்பார்களா? யாராவது வைத்திருப்பார்களா? எல்லாம் புலன் பெயர்ந்துள்ள கொழுப்பெடுத்த தமிழினவாளர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள்தான் பிரபாகரனுக்கு தலைப்பாகையும் கட்டினார்கள் இப்போ மாலையும் அணிவிக்கப்போகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக