செவ்வாய், 13 அக்டோபர், 2009

டிஆர் பாலுவின் தகாத வார்த்தை பிரயோகங்களால் வவுனியா அரச அதிபர் அழுதார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட இலங்கை சென்றுள்ள இந்திய பாராளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்றுள்ள டிஆர் பாலுவின் வார்த்தைப் பிரயோகங்களால் வவுனியா மாவட்ட பிரதேச செயலர் திருமதி. சார்ள்ஸ் அவர்கள் கண்ணீர் விட்டழுததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தொலைபேசி ஊடாக கருத்து தெரிவித்த திருமதி. சார்ள்ஸ், இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற குழுவின் இடைத்தங்கல் முகாம்களுக்கான விஜயத்தின் நிகழ்சி நிரலில் தலையிடவேண்டாம் என டிஆர் பாலு கேட்டுக்கொண்டதாகவும், அவரது அதிகார தோரணையிலான பேச்சும் குரல் ஆழுத்தமும் தன்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் செய்தியில் இடைத்தங்கல் முகாம் ஒன்றிற்கு செல்லமுற்பட்ட டிஆர் பாலு குழுவினருடன், திருமதி சார்ள்ஸ் அவர்களும் செல்ல முற்பட்டபோது, இலங்கை அதிகாரிகளின் வழித்துணை தமக்கு அவசியம் இல்லை டிஆர் பாலு அவரை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது மிகவும் சிறப்பாக செயற்பட்டு அம்மக்களின் அன்றாட தேவைகளைக் கவனித்து திருமதி. சார்ள்ஸ் அவர்கள் தனது கடமையை செய்து வந்திருந்திருந்தார். இந்நிலையில் தமது அரசியல் தேவைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க இலங்கை வந்திருக்கும் டிஆர் பாலுவை இலங்கை அரசாங்கம் நாடுகடத்தாமை பலரதும் சிந்தனையை தூண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக