அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் படகொன்றில் சென்று கொண்டிருக்கையில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டபோது உண்ணாவிரம் இருந்த இலங்கை அகதிகள் என தம்மை கூறுவோர் 56 மணித்தியாலயங்களின் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.அவர்களில் பலர் உயிர் இழந்துள்ளதாக Sydney Morning Herald எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. அங்கு சென்ற மக்கள் சார்பான பேச்சாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள அலெக்ஸ் என்பவர், கடத்தல்காரர்கள் 30 குடும்பங்களிடமிருந்து 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயணச் செலவாக பெற்றுள்ளதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தை ஒன்றுக்கு கூட 15000 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 4 மில்லியின் அமெரிக்க டொலர்களை வழங்கக் கூடிய 30 குடும்பங்கள் வன்னியில் இருந்தாக என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக