சனி, 27 ஏப்ரல், 2019

மீண்டும் ஊடக பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!

மீண்டும் எமது செய்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதனை எமது வாசக நெஞ்சங்களுக்கு அறியத்தருகின்றோம்.


சனி, 5 மார்ச், 2016

புங்குடுதீவு வித்யாவின் 31வது நினைவு தினத்தில் "புளொட்" சுவரொட்டி மூலம் அஞ்சலி & இலங்கை அரசுக்கும் கோரிக்கை..!!

புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனின் 31வது நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி சுவரொட்டி பிரசுரத்தை வெளியிட்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ("புளொட்" அமைப்பு)  புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல் தொடர்பாக தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்து உள்ளதுடன், "போதைவஸ்து, வாள்வெட்டு" போன்ற சம்பவங்களை உடன் தடுத்து நிறுத்துமாறு, இலங்கை அரசுக்கும் மேற்படி சுவரொட்டி மூலமும் கோரிக்கை விடுத்துள்ளது.

"புளொட்" அமைப்பு வெளியிட்டுள்ள மேற்படி பிரசுரத்தில்,..

வெள்ளி, 12 ஜூன், 2015

பெருவிழாக்களாய் கூத்து ஆற்றுகைகள் - சி.துஜான்

நடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் - கிழக்குப் பல்கலைக்கழகம்:-
இன்றைய இயந்திரச்சூழலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதர்கள்; நிதமும் கடிகார முள்ளின் சுழற்சியை எண்ணி எண்ணி அதனை தோற்கடிக்க முயன்று ஆற்றாமை அவர்களது மனதை இறுக்கிக் கொண்டது. இதன் பேறாக கடற்கரைகள், அமைதியான இடங்கள், சுற்றுலாக்கள் செல்லுதல் என தம்மை நெகிழ்ச்சிபடுத்த முற்படுகின்றனர். இதனை கையகப்படுத்திக் கொண்டோர் தமது அறிவுச்செல்வத்தின் சாதூரியத்தால் இசை நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், விந்தை நிகழ்வுகளை நடாத்தி தம் கல்லாவை நிறைத்துக் கொள்கின்றனர். இதற்கு நகரம் மட்டுமல்ல கிராமிய மக்களும் பலிக்கடாவாகின்றனர்.

இத்தகைய போராட்டங்களின் மத்தியிலும் அவற்றை எதிர்கொண்டு வாழத் தக்க சூழலை அமைத்து தனித்துவம் தரும் தன்மையுடன் பராம்பரிய கலைகள் கிராமங்கள் தோறும் நிகழ்ந்தும் வருகின்றன. கலைவடிவங்கள் அல்லது ஏனைய வடிவங்கள் தான்இயங்கும் தளத்தின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பண்பாடுகளினால் தீர்மானம் கொண்டவை இது சகல இடங்களுக்கும் பொருந்தும். இக்கலைகளின் நேரிடை எதிர்கொள்வோர் அச்சூழலுக்கே உரித்தான பார்வையாளர், பங்காளரே சில தேவை கருதி மாற்று இடங்களிலும் வேறு பண்பாட்டு கலாச்சார பின்னணிகொண்ட பார்ப்போரை இலக்குக்கு உட்படுத்துவதும் உண்டு.

திங்கள், 8 ஜூன், 2015

யாழ் மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.!(படங்கள் இணைப்பு)

யாழ் மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தின் தலைவர் .லக்கன் தலைமையில் அண்மையில் மானிப்பாய் இந்துக்கல்லுரி மைதனத்தில் நடைபெற்றது

இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ.பா.கஜதீபன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துகொண்டனர்.முன்னதாக இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள்

குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி.!(படங்கள் இணைப்பு)

யாழ். குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2015 நிகழ்வு நேற்றுமாலை (06.06.2015) முன்பள்ளியின் தலைவர் திரு. சதீஸ்குமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். 

இந்நிகழ்வில் ஏழாலை சிறீமுருகன் வித்தியாசாலையின் அதிபர் திரு. சந்திரகுமார், பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. தவராசா, கிராம சேவையாளர் மயூரதன், சமூக ஆர்வலர் அபராசுதன் ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்களல விளக்கேற்றல் இடம்பெற்றது.

வெள்ளி, 5 ஜூன், 2015

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவின் மாபெரும் கண்காட்சி.!(படங்கள் இணைப்பு)

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவ மாணவிகளின் வருடாந்த கண்காட்சி இன்றைய தினம் காலை 10.30 மணிமுதல் 2.00 மணிவரை கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு கோ.தர்மபாலன், வவுனியா புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை அருட்திரு எஸ்.சத்தியராஜ், கல்லூரி அதிபர் அருட்சகோதரி திரேசம்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் சுற்றாடல் தின பரிசளிப்பும்; பல் ஊடக எறியீ கையளிப்பும்.!(படங்கள் இணைப்பு)

இன்று உலக சுற்றாடல் தினமாகும். இதனை முன்னிட்டு யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் பாடசாலையின் அதிபர் திருமதி சி.கந்தசாமி அவர்களின் தலைமையில் இன்று சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மூலிகைக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலையில் பல்வகையான மூலிகை செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வகை மூலிகைச் செடிகளை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து சுற்றாடல் நிகழ்வுகளில் பங்குபற்றிய பிள்ளைகளுக்காக சுற்றாடல் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

இங்கு திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில்,

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய வெள்ளி விழா நிகழ்வு.!(PHOTOS)

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு இன்று (05.06.2015) வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு. சு.உதயகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்சதி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள் கே.சிவநேசன், ஜி.ரி லிங்கநாதன், எம்.பி நடராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், கல்வி சார் விருந்தினர்களாக வ.சிதம்பரநாதன் (பீடாதிபதி தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா), கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

வியாழன், 4 ஜூன், 2015

2015 ஆம் ஆண்டிற்கான சாரண சேவை மற்றும் பொதுத்தொடர்புகள் வாரத்தினை சிறப்பிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். திரு சு.காண்டீபன்

நாளைமுதல் 2015 ஆம் ஆண்டிற்கான சாரண  சேவை மற்றும் பொதுத்தொடர்புகள் வாரம் நாடளாவிய ரீதியில்  நடைபெறவுள்ளது.

ஜூன் 5ல் இருந்து ஜூன் 15 வரை  இலங்கை சாரணர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை சாரணர் சேவை மற்றும்  பொதுத் தொடர்புகள்  நடைபெறவுள்ளதாக வவுனியா மாவட்ட ஊடக மற்றும் பொதுத் தொடர்புகள் பிரிவிற்கான உதவி மாவட்ட ஆணையாளர் திரு சு.காண்டீபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில். 

சாரணர் சேவை மற்றும்  பொதுத் தொடர்புகள் வாரமானது  இலங்கை சாரணர் தலைமைக்காரியலயத்தினால்   முன்னெடுக்கப்படும்    நிகழ்வு ஆகும்.   சாரணர்கள்  ஆண்டுதோறும் தமது  சாரணர் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளும் ஓர் உன்னத நிகழ்வாகும் . நாடு பூராகவும் 37 சாரண நிர்வாக மாவட்டங்களில்  45000 க்கு மேற்பட்ட சாரணர்கள் இம் முறை தமது சாரணர் சேவை மற்றும்  பொதுத் தொடர்புகள் வாரத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நடாத்திய மலைத்தென்றல் நிகழ்வு!!(படங்கள் இணைப்பு)

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்  பெருமையுடன் நடாத்திய தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களையும் சிறப்புக்களையும் வெளிக்காட்டும் மலைத் தென்றல் நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வு கடந்த  சனிக்கிழமை (30.05.2015) பிற்பகல்  01.30 மணி  முதல் மாலை 06.30 மணி வரை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வலி மேற்கில் சுற்றுலா பிரதேசங்கள் முன்மொழிவு.(படங்கள் இணைப்பு)

வலி மேற்கு பிரதேசத்தின் திருவடி நிலைப் பகுதியில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் தலைமையிலான உத்தியோகஸ்தர்கள் அணி, குறித்த பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக்கும் பொருட்டு அண்மையில் பார்வையிட்டனர்.

 இதே வேளை இவ் விடயம் தொடர்பாக  வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களிடம் வினவிய போது

புதன், 3 ஜூன், 2015

விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல! வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது!- நிமல்

அரசாங்கத்தின் அச்சாணி வடமாகாண சபையிடமே உள்ளது.வட மாகாணத்தின் தேவைக்கேற்ப அடிபணிந்தும் அஞ்சியுமே அரசாங்கம் செயற்படுகின்றது. வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூற விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல. யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என்ற வகையில் வட

உடுவிலில் வாள் வெட்டு; இருவர் படுகாயம்!

உடுவில் பகுதியில் நேற்று  இரவு 8 மணியளவில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். உடுவில் கிழக்கு, நாகம்மாள் கோவிலடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

 இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: வீட்டில் இருந்த குடும்பஸ்தரை

புதிய தேசிய கொடி உருவாக்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை!– அரசாங்கம்!!

புதிய தேசிய கொடி உருவாக்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் தேசிய கொடிக்கு பதிலாக புதிய தேசிய கொடியொன்று உருவாக்கப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அலங்காரத்திற்காக தேசிய கொடி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் மாற்று கொடியொன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுதேச விவகார

யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! 44 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்!


யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 44 பேர் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை பொலிஸ் காவலரண் மீதான தாக்குதல், யாழ். சிறைச்சாலை

அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய படகு நடுக்கடலில் விபத்து - இலங்கை அகதிகளும் பாதிப்பு!

இலங்கையர்கள் அடங்கலாக 65 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட சமயம், படகு விபத்துக்கு உள்ளானதாக இந்தோனேஷிய பொலிசார் அறிவித்துள்ளார்கள்.

படகில் இருந்தவர்களில் 54  இலங்கையர்களும். பங்களாதேஷை சேர்ந்த 10

செவ்வாய், 2 ஜூன், 2015

தவறான நோக்கில் சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்றவர் மீது ஊர் மக்கள் ஒன்று திரண்டு தாக்குதல்.!(PHOTOS)

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.
குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பிடிக்க முடிந்ததாக புத்தளம் காவற்துறையினர் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சிறுமி புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இரட்டை பிள்ளைகளில் ஒருவர் எனவும் மற்றைய பிள்ளை ஆண் பிள்ளை எனவும் கூறப்படுகிறது.

வவுனியாவில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு.!

வவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.
வவு­னியா பன்­றிக்­கெய்த குளம் பாட­சா­லையில் கல்வி கற்கும் 14 வய­து­டைய ஜெ. பவித்­திரா என்­ப­வரே அவ­ரது வீட்­டிற்குள் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.
தாய் அண்­மையில் அரபு நாடொன்றில் இருந்து இலங்கை திரும்­பி­யி­ருந்த நிலையில் மீண்டும் அரபு நாட்­டிற்கு செல்ல பொலிஸ் நிலை­யத்தில் சான்­றி­த­ழொன்­றினை பெற சென்ற சம­யமே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது என பிர­தேசவாசிகள் தெரிவிக்­கின்­றனர்.

ஞாயிறு, 31 மே, 2015

"நாங்கள்" அமைப்பின் வாழ்வாதார உதவி.! (படங்கள் இணைப்பு)

யாழ். சங்குவேலி விவசாய சம்மேளனத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமது வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தினை ஆரம்பிப்பதற்காக “நாங்கள்” என்ற அமைப்பு நேற்று (30.05.2015) பயிர்ச் செய்கைக்கான விதைகளை விநியோகித்து உதவியுள்ளது. 

“நாங்கள்” அமைப்பின் செயலாளர் திரு. பிரதாப் மற்றும் அவ் அமைப்பின் அங்கத்தவர் அனுசன் ஆகியோர் பயிர்க்களுக்கான விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிவைத்தார்கள். இளைஞர் சம்மேளனத்தின் வட மாவட்டத் தலைவர் திரு. விஜிதரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

வரலாற்றில் இன்றைய நாள் என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாத நாள்- திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்

34 வது ஆண்டு நிறைவு நாள்
தழிழினத்தின் வரலாற்றில் இன்றைய நாள் என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாத நாள் 1981ம் ஆண்டின் வைகாசி 31ம் நாள் யாழ் நகரில் எங்கள் அறிவுக்கருவூலம் கருவறுக்கப்பட்டு கடையச் செறுக்கர்களால் தழிழினத்தின் மீது பண்பாட்டுப் படுகொலை நிறைவேற்றப்பட்ட நாள்.

எமது இனத்தின் தனிப் பெருமையே கல்வி. அந்த கல்வியின் அடித்தளம எங்கள் யாழ்ப்பாண நூலகம். எங்கள் கல்வியின் தனிப் பெரும் தன்மையினை தாய் மண்ணில் அழித்திட அரக்கர் உருவத்தில்; அரசியல் வழிகாட்டலில் காடைத்தனம் நிறைவேற்றப்பட்டு கல்விக் கருவூலம்

சுவிசில் இன்றையதினம், "அமரர் சிறீ சபாரட்ணம் உட்பட ரெலோ போராளிகளின் நினைவுதினம்" அனுஷ்டிப்பு & புங்குடுதீவு வித்தியாவுக்கும் அஞ்சலி..!!(படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) சர்வதேச செயலகத்தினால் சுவிஸ்லாந்தின் சொலத்தூண் மாவட்டத்தில் ரெலோ செயலாளர் நாயகம் அமரர் சிறீ சபாரட்ணம் அவர்கள் உட்பட உயிர்நீத்த ரெலோ இயக்கப் பேராளிகளின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (30.05.2015) அனுஷ்டிக்கப்பட்டது.  

இதன்போது உயர் நீத்தவர்களுக்காக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து மௌன அஞ்சலி மற்றும் மலர் அஞ்சலி என்பன இடம்பெற்றன.

ரெலோ தோழர் திரு.சேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், ரெலோ தோழர் திரு.செல்வா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிட திறப்பு விழா.!(படங்கள் இணைப்பு)

அண்மையில் நெல்லியடி புதிய பேருந்து தரிப்பிட திறப்பு விழா தவிசாளர் வியாகேசு தலைமையில்  நடைபெற்றது இவ் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கலந்து சிறப்பத்துக்கொண்டார்.

வலி மேற்கு பிரதேசத்தில் 10 நூலகங்கள் திறக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)

வலி மேற்கு பிரதேசத்தில் வேள் விசன் நிறுவனத்தின் உதவியுடன் 10 நூலகங்கள் திறக்கப்பட்டது.இவற்றின் போது அண்மையில் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் இவ் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வின் போது சம்பத் வங்கி குறித்த நூலக பயன் பாட்டிற்கு தளபாடங்களையும் வழங்கினர்

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது இன்று மாணவர்கள் மத்தியில் நூலகஙகளுக்கு சென்று வசிக்கும் நிலை குறைவடைந்து வருவது அவதானிக்க கூடியதாக உள்ளது இவ் நிலையில் ஒர் அதிகரித்த நிலையை உருவாக்கவே இவ்வாறான செயல் திட்டம் முன்வைக்கப்படுகின்றது. இதே வேளை மாணவர்களின் வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க வேண்டிய நிலை எல்லோரும் இனைந்து உயர்த்துவதறகு முயற்சிக்க வேண்டும். 

வெள்ளி, 29 மே, 2015

யாழ், ஏழாலை வடக்கில் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கும் நிகழ்வு.!(படங்கள் இணைப்பு)

யாழ். ஏழாலை வடக்கு கிராம முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று (28.05.2015) ஏழாலை கிராம முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விக்கினரஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. 

ஏழாலை வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் லண்டனில் வசிக்கின்ற நல்லதம்பி சற்குணநாதன் தம்பதிகளால் சுயதொழில் முயற்சிக்ககான உதவிகளும், கணனி மற்றும் தையல் வகுப்புக்களுக்கான உதவிகளும் வழங்கப்பட்டன. 

வவுனியா நொச்சிக்குளம் இல.01 க.உ.வித்தியாலயத்தின் பெற்றோர் தின விழா.!(படங்கள் இணைப்பு)

வவுனியா நொச்சிக்குளம் இல.01 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் பெற்றோர் தின விழா நேற்று (28.05) வித்தியாலய மண்டபத்தில் அதிபர் திரு க.ஜெயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் முதன்மை அதிதியாக வவுனியா வடக்கு  வலய கல்விப் பணிப்பாளர் திரு வ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதன், 27 மே, 2015

உடுவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா.!(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2015 ஆனது உடுவில் பிரதேச செயலாளர் திரு. நந்தகோபாலன் அவர்களின் தலைமையில் நேற்று (26.05.2015) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன் மற்றும் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு.பிரகாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். 

50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்ள முன்வரும் கென்யா மாப்பிள்ளை.!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், தற்போது 16 வயது பருவப்பெண்ணாக இருக்கும் மாலியாவை திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக கென்யாவை சேர்ந்த வக்கீல் இளைஞர் தெரிவித்துள்ளார்.

கென்யாவின் கெரிச்சோ கவுண்ட்டியில் குன்றுகள் சூழ்ந்த நகரமான லிட்டெய்ன் பகுதியை சேர்ந்த பிலிக்ஸ் கிப்ரோனோ மடாகெய், ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்வதில் மிகவும் தீவிரமாக உள்ளார். ஒபாமா தனது 2008-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னரே, அப்போது 10 வயது சிறுமியாக இருந்த மாலியா மீது ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாக இவர் கூறுகிறார்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் அதிரடி நியமனம்.!.


யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மலைத்தென்றல் நிகழ்விற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகம் வாழ்த்து.!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெருமையுடன் நடாத்தும், தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு பாரம்பரியங்களையும் சிறப்புக்களையும் வெளிக்காட்டும் மலைத் தென்றல் நிகழ்வு இவ்வருடமும் மிகவும் பிரமாண்டமான முறையில் ,எதிர்வரும் சனிக்கிழமை (30.05.2015) பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடாத்த திட்டமிட்டுள்ள எமது ஊவா வெல்லஸ்ஸ பல்கலை தமிழ் மாணவ சமூகத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

ஷசி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவும் கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவரை, நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.