புதன், 3 ஜூன், 2015

உடுவிலில் வாள் வெட்டு; இருவர் படுகாயம்!

உடுவில் பகுதியில் நேற்று  இரவு 8 மணியளவில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். உடுவில் கிழக்கு, நாகம்மாள் கோவிலடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

 இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: வீட்டில் இருந்த குடும்பஸ்தரை
மோட்டார் சையிக்கிள் மற்றும் வானில் வந்த ஏழு பேர் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். கதறல் சத்தம் கேட்டு உதவ சென்ற அயல்வீட்டுகாரனும் இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கானார். வலி. வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியரான தங்கவேல் கருணாகரன் (வயது 35) தலையிலும் தோள் பட்டையிலும் படுகாயமடைந்தார். அயல் வீட்டுக்காரரான கூலி வேலை செய்யும் குணரத்தினம் கஜேந்திரன் (வயது 25 ) என்பர் கைகளில் படுகாயமடைந்தார். சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக