வியாழன், 4 ஜூன், 2015

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நடாத்திய மலைத்தென்றல் நிகழ்வு!!(படங்கள் இணைப்பு)

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்  பெருமையுடன் நடாத்திய தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களையும் சிறப்புக்களையும் வெளிக்காட்டும் மலைத் தென்றல் நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வு கடந்த  சனிக்கிழமை (30.05.2015) பிற்பகல்  01.30 மணி  முதல் மாலை 06.30 மணி வரை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  முன்னாள் கலை கலாசாரப் பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும் கௌரவ விருந்தினர்களாக ஊவா மாகாண அமைச்சர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ஜி.சந்திரசேன அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் அவர்களும் பல்கலைக்கழக மாணவர்கள், கலை ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

மலைத்தென்றல் நிகழ்வின் சிறப்பு அம்சங்களாக பரதநாட்டிய நிகழ்வு, இசை நிகழ்ச்சி, சரித்திர நாடகம், தமிழ் ஆடல் மரபுகள், மற்றும்  மலைத்தென்றல் நிகழ்வை பிரதிபலிக்கும் புத்தக வெளியீடும் நடைபெற்றது.

தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை வெளிக்காட்டும் இவ் மலைத்தென்றல் நிகழ்வு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக