சனி, 5 மார்ச், 2016

புங்குடுதீவு வித்யாவின் 31வது நினைவு தினத்தில் "புளொட்" சுவரொட்டி மூலம் அஞ்சலி & இலங்கை அரசுக்கும் கோரிக்கை..!!

புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனின் 31வது நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி சுவரொட்டி பிரசுரத்தை வெளியிட்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ("புளொட்" அமைப்பு)  புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல் தொடர்பாக தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்து உள்ளதுடன், "போதைவஸ்து, வாள்வெட்டு" போன்ற சம்பவங்களை உடன் தடுத்து நிறுத்துமாறு, இலங்கை அரசுக்கும் மேற்படி சுவரொட்டி மூலமும் கோரிக்கை விடுத்துள்ளது.

"புளொட்" அமைப்பு வெளியிட்டுள்ள மேற்படி பிரசுரத்தில்,..
*அரசே, மாணவி வித்தியாவின் விடயத்தில் உடன் நீதியை நிலைநாட்டு!
**அரசே, போதைவஸ்து, வாள்வெட்டுக்களை உடன் தடுத்து நிறுத்து!!
***அரசே, மக்களை அச்சத்திலிருந்து விடுவித்து நிம்மதியாக வாழவிடு!!!
போன்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன.

மேற்படி சுவரொட்டி வன்னிப் பிரதேசம் எங்கும், குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் அரச அலுவலகங்களுக்கு முன்பாகவும், பொதுமக்கள் கூடும் சந்தை, கோயில் போன்ற வணக்க ஸ்தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு முன்பாக என்று பரவலாக இன்று ஒட்டப்பட்டு காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான இடங்களான புகையிரத  நிலையத்தடி, அரசாங்க அதிபர் பணிமனை, பிரதேச செயலாளர் பணிமனை, பிரதேச சபை முன்பாகவும், பிரதான சந்திகளிலும் "புளொட்" அமைப்பு, தமது அஞ்சலி பிரசுரத்தை வெளிப்படுத்தி தமது அஞ்சலியை செலுத்தியதைக் காணக் கூடியதாகவுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவின் தண்ணீரூற்று, மாமூலை, முள்ளிவளை, பூதன்வயல், வற்றாப்பளை, கேப்பாபிளவு, மான்சோலை, கணுக்கேணி, நீராவிப்பிட்டி, கிச்சிராபுரம் போன்ற பல பகுதிகளிலும் உள்ள பிரதான சந்திகளிலும் "புளொட்" அமைப்பு, தமது அஞ்சலி பிரசுரத்தை வெளிப்படுத்தி தமது அஞ்சலியை செலுத்தியதைக் காணக் கூடியதாகவுள்ளது., 

இதேபோல் வவுனியா மாவட்டத்தின் சிதம்பரபுரம், எல்லப்பர் மருதங்குளம், கோவில்குளம், குடியிருப்பு, கோமரசங்குளம், தாண்டிக்குளம், குழுமாட்டுசந்தி, திருநாவற்குளம், செட்டிகுளம் மன்னார் வீதி, ஏ9 பிரதான வீதியின் இருமருங்கிலும், உட்பட வவுனியாவின் நகரம் பூராவும் "புளொட்" அமைப்பு, தமது அஞ்சலி பிரசுரத்தை வெளிப்படுத்தி தமது அஞ்சலியை செலுத்தியதைக் காணக் கூடியதாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக