புதன், 27 மே, 2015

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மலைத்தென்றல் நிகழ்விற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகம் வாழ்த்து.!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெருமையுடன் நடாத்தும், தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு பாரம்பரியங்களையும் சிறப்புக்களையும் வெளிக்காட்டும் மலைத் தென்றல் நிகழ்வு இவ்வருடமும் மிகவும் பிரமாண்டமான முறையில் ,எதிர்வரும் சனிக்கிழமை (30.05.2015) பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடாத்த திட்டமிட்டுள்ள எமது ஊவா வெல்லஸ்ஸ பல்கலை தமிழ் மாணவ சமூகத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் இவ் நிகழ்வில் எமது பாரம்பரிய கலைகளுடன் பரதநாட்டிய நிகழ்வு, இசை நிகழ்ச்சி, சரித்திர நாடகம், தமிழ் ஆடல் மரபுகள், மற்றும் மலைத்தென்றல் நிகழ்வை பிரதிபலிக்கும் புத்தக வெளியீடும் நடைபெற இருப்பதையிட்டு எமது கழகம் பெருமைகொள்கிறது. இவர்களின் ஊக்கங்கள் ஆக்கங்களாக வெளிவருவது எமது சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதே வெளிப்படை உண்மை.
இவ்வாறான நிகழ்வுகள் எமது கலைத்துறையின் அனைத்து திறமைகளையும் வெளிக்கொணரும் நிகழ்வாக இருப்பதனால் இவ் நிகழ்வு நிச்சயமாக ஒரு ஆளுமை மிக்க சமூகத்தை தோற்றுவிக்கும் ஒரு காரண நிகழ்வாக அமைய கழகம் வாழ்த்தி நிற்பதாகவும் தெரிவித்தார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக