வெள்ளி, 5 ஜூன், 2015

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவின் மாபெரும் கண்காட்சி.!(படங்கள் இணைப்பு)

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவ மாணவிகளின் வருடாந்த கண்காட்சி இன்றைய தினம் காலை 10.30 மணிமுதல் 2.00 மணிவரை கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக வவுனியா தெற்கு கல்வி வலய முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு கோ.தர்மபாலன், வவுனியா புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை அருட்திரு எஸ்.சத்தியராஜ், கல்லூரி அதிபர் அருட்சகோதரி திரேசம்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


மாணவ சிறார்களின் கல்விக் கண்காட்சி பார்ப்போரின் உள்ளங்களை பூரிப்படைய செய்ததுடன், இவ் கண்காட்சியை பலர் பார்வையிட்டு சென்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பூர்வீகம் செய்திகளுக்காக வவுனியாவிலிருந்து ஸ்ரீ.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக