புதன், 3 ஜூன், 2015

புதிய தேசிய கொடி உருவாக்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை!– அரசாங்கம்!!

புதிய தேசிய கொடி உருவாக்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் தேசிய கொடிக்கு பதிலாக புதிய தேசிய கொடியொன்று உருவாக்கப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அலங்காரத்திற்காக தேசிய கொடி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் மாற்று கொடியொன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுதேச விவகார
அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தேசிய கொடிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலும், தேசிய கொடி திரிபுபடுத்தியும் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

தேசிய கொடியினை கிரமமான முறையில் பயன்படுத்துவதற்கு நியதிகளை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அலங்காரகமாக தேசிய கொடி பயன்படுத்தப்படக் கூடாது என அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும், யோசனைக்கு அமைச்சரவையிலிருந்து மாற்று யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளின் போது தேசிய கொடியை அலங்காரத்திற்காக பயன்படுத்தாது பொருத்தமான மாற்று கொடியொன்றை பயன்படுத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புரிந்து கொள்ளாது விமல் வீரவன்ச போலிக் குற்றச்சாட்டை சுமத்துகின்றார்.

தேசிய உருவாக்குதல் மற்றும் பயன்பாடு குறித்து பின்பற்றப்பட வேண்டிய நியதிகள் குறித்த சட்ட மூலமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுதேச விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக