செவ்வாய், 2 ஜூன், 2015

வவுனியாவில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு.!

வவு­னியா புதிய வேலர் சின்­னக்­கு­ளத்தில் தூக்கில் தொங்­கிய நிலையில் சிறுமி ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.
வவு­னியா பன்­றிக்­கெய்த குளம் பாட­சா­லையில் கல்வி கற்கும் 14 வய­து­டைய ஜெ. பவித்­திரா என்­ப­வரே அவ­ரது வீட்­டிற்குள் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.
தாய் அண்­மையில் அரபு நாடொன்றில் இருந்து இலங்கை திரும்­பி­யி­ருந்த நிலையில் மீண்டும் அரபு நாட்­டிற்கு செல்ல பொலிஸ் நிலை­யத்தில் சான்­றி­த­ழொன்­றினை பெற சென்ற சம­யமே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது என பிர­தேசவாசிகள் தெரிவிக்­கின்­றனர்.

இச் சம்­பவம் தொடர்­பாக ஓமந்தை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­துடன் சம்­பவ இடத்­திற்கு வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக