ஞாயிறு, 31 மே, 2015

வரலாற்றில் இன்றைய நாள் என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாத நாள்- திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்

34 வது ஆண்டு நிறைவு நாள்
தழிழினத்தின் வரலாற்றில் இன்றைய நாள் என்றும் மறக்கவோ மறைக்கவோ முடியாத நாள் 1981ம் ஆண்டின் வைகாசி 31ம் நாள் யாழ் நகரில் எங்கள் அறிவுக்கருவூலம் கருவறுக்கப்பட்டு கடையச் செறுக்கர்களால் தழிழினத்தின் மீது பண்பாட்டுப் படுகொலை நிறைவேற்றப்பட்ட நாள்.

எமது இனத்தின் தனிப் பெருமையே கல்வி. அந்த கல்வியின் அடித்தளம எங்கள் யாழ்ப்பாண நூலகம். எங்கள் கல்வியின் தனிப் பெரும் தன்மையினை தாய் மண்ணில் அழித்திட அரக்கர் உருவத்தில்; அரசியல் வழிகாட்டலில் காடைத்தனம் நிறைவேற்றப்பட்டு கல்விக் கருவூலம்
சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட சாம்பலின் சிதறல்கள் எங்கள் இளைய இனத்தின் வலிகள் ஆக்கப்பட்டது அந்த வலிகளையே வரிகள் ஆக்கிய வேங்கைகள் காலத்;தினால் காடையர்களுக்கு இதுவெ எமது இனத்தின் வீர வரலாறு என பாடம்புகட்டிய வரலாறுகள் பல. அழித்த கருவூலத்தின் நினைவுகளையும் வரலாற்றின் நிகழ்வுகளையும் என்றும் மனதில் கொண்டவர்களாக மீண்டும் என்றே எமது உரிமை பெறுவோம் என உறுதிபூண்டு. நினைவுகளுக்காக பிரார்த்திப்போம்.

என்றும் தழிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்,
தவிசாளர்,
வலி மேற்கு பிரதேச சபை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக