ஞாயிறு, 31 மே, 2015

வலி மேற்கு பிரதேசத்தில் 10 நூலகங்கள் திறக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)

வலி மேற்கு பிரதேசத்தில் வேள் விசன் நிறுவனத்தின் உதவியுடன் 10 நூலகங்கள் திறக்கப்பட்டது.இவற்றின் போது அண்மையில் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் இவ் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வின் போது சம்பத் வங்கி குறித்த நூலக பயன் பாட்டிற்கு தளபாடங்களையும் வழங்கினர்

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது இன்று மாணவர்கள் மத்தியில் நூலகஙகளுக்கு சென்று வசிக்கும் நிலை குறைவடைந்து வருவது அவதானிக்க கூடியதாக உள்ளது இவ் நிலையில் ஒர் அதிகரித்த நிலையை உருவாக்கவே இவ்வாறான செயல் திட்டம் முன்வைக்கப்படுகின்றது. இதே வேளை மாணவர்களின் வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க வேண்டிய நிலை எல்லோரும் இனைந்து உயர்த்துவதறகு முயற்சிக்க வேண்டும். இனறைய நவீன கற்றல் முறைகள் மற்றும் கற்பித்தல் முறைக்கு ஊடாக இவ் நூலகங்களின் பயன் பாட்டினை அதிகரிக்க நவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் இதே வெளை இவ் நூலகங்களுக்கு உள்ள வாசகர் வட்டத்தினை மேலும் விரிவடைச் செய்து அதன் வாயிலாக போட்டிகளை ஏற்படுத்தி மணவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதறகு முயற்சிக்க வேண்டும். இவ் செயற்பாடுகள் தனித்த ஒருவரால் அன்றி ஒரு சமூகமாக இணைந்து மேற்கொள்வதற்கு தயாராக வேண்டும். இவ் நிலையிலேயே மாற்றஙகள் ஏற்படும்.இந்த நாட்டில இரு இனங்களுக்கிடையே நடந்த அழிவாயுத யுத்தம் நிறைவுக்கு வநததன் பின்னர் தற்போது அறிவாயுத யுத்தம ஆரம்பிக்கப்பட்டுள்ளது இவ் யுத்தத்தில் நாம் வெற்றிபெற்றவர்களாக வேண்டுமாயின் எமது சிறார்களின் அறிவு நிலையினை உயர்த்தவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். சிறுவர்களைச் சுற்றி கல்விக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஆரம்ப கல்வி மிக முக்கியமான நிலையில் உள்ளது இவ் நிலையில் மகிழ்வான ஒர் கல்விச் சூழல் பேணப்பட வேண்டும். எனக குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக