இலங்கையர்கள் அடங்கலாக 65 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட சமயம், படகு விபத்துக்கு உள்ளானதாக இந்தோனேஷிய பொலிசார் அறிவித்துள்ளார்கள்.
படகில் இருந்தவர்களில் 54 இலங்கையர்களும். பங்களாதேஷை சேர்ந்த 10
பேரும், மியன்மாரைச் சேர்ந்த ஒருவரும், மாலுமிகள் ஐந்து பேரும் படகில் பயணித்துள்ளனர்.
தாம் நியூசிலாந்தை அடைய முனைந்த சமயம், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக படகில் இருந்தவர்கள் கூறினார்கள் என்று இந்தோனேஷிய பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இவர்களின் படகு தொலைதூரத்திலுள்ள லான்டுற்றி என்ற தீவிற்கு அருகில் விபத்துக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து, படகில் இருந்தவர்கள் கிழக்குத் தீமோருக்கு அப்பாலுள்ள ரோட் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
படகைச் செலுத்திய மாலுமிகளில் ஒருவர் பொலிசாரிடம் இருந்து தப்பியோடி இருக்கிறார். அவர் கண்டுபிடிக்கப்படவில்லையென அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மே மாதம் ஐந்தாம் திகதி மேற்கு ஜாவா பிரதேசத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய படகு, அவுஸ்திரேலிய எல்லைக் காவல் படையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் சற்று நல்ல நிலையில் இருந்த படகிற்குத் தம்மை மாற்றி, உலர்த்தப்பட்ட பழவகைகள், பிஸ்கட் வகைகள், உயிர் காப்பு அங்கிகள் போன்றவற்றை வழங்கி, தம்மை மீண்டும் இந்தோனேஷிய கடற்பரப்பிற்குள் அழைத்துச் சென்றதாக படகில் இருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
படகு விபத்துக்கு உள்ளானதை அடுத்து, புகலிடக் கோரிக்கையாளர்கள் மீனவர்கள் கண்டதாக ஏபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக