புதன், 21 ஏப்ரல், 2010

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 144 ஆசனங்கள்..!

நடந்து முடிந்துள்ள 2010 பொதுத்தேர்தல் மற்றும் மீள் தேர்தல் என்பவற்றில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களும், தேசியப் பட்டியல்மூலம் 17ஆசனங்களுமாக மொத்தம் 144 ஆசனங்களைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி 60ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும், ஜெனரல் சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி 07ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக