திங்கள், 12 ஜனவரி, 2015

புதிய அரசாங்கத்தில் பதவியேற்ற அமைச்சர்களின் விபரம்..!!

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர். அமைச்சுகளின் பணிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் முன்னெடுப்பதாக அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க – கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகரம்.


ஜோன் அமரதுங்க – பொது சமாதானம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகாரம்.

ஜோசப் மைக்கல் பெரேரா – உள்துறை

காமினி ஜயவிக்ரம பெரேரா – உணவு பாதுகாப்பு

மங்கள சமரவீர - வெளிவிவகாரம்

கரு ஜயசூரிய- புத்தசாசனம்

லக்ஷ்மன் கிரியெல்ல – பெருந்தோட்ட கைத்தொழில்

ரவி கருணாநாயக்க – நிதி

ரவூப் ஹக்கீம் – நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

சம்பிக்க ரணவக்க – மின் வலு மற்றும் எரிசக்தி

ராஜித சேனாரத்ன – சுகாதாரம்

துமிந்த திஸாநாயக்க – நிர்பாசனம்

கபீர் ஹசீம்– பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு

எஸ்.கே.டி.எஸ். குணவர்தன- காணி

சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமுர்த்தி

விஜேதாச ராஜக்ஷ– நீதி

கயந்த கருணாதிலக்க– ஊடகம்

நவீன் திஸாநாயக்க– சுற்றுலா

அர்ஜூன ரணதுங்க– துறைமுகம்

டி.எஸ்.ஏ. சுவாமிநாதன் – மீள்குடியேற்றம், நிர்மாணம் மற்றும் இந்து சமய விவகாரம்

றிசார்ட் பதியூதீன் - கைத்தொழில் மற்றும் வாணிபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக