வெள்ளி, 16 மே, 2014

பெற்ற மகனுக்கு சூடு வைத்த தாய் கைது: மட்டக்களப்பில் சம்பவம்!!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரானில் பாடசாலை செல்ல மறுத்த மாணவனுக்கு நெருப்பினால் சூடு வைத்த தாய் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; தரம் 2 இல் கல்வி பயிலும் 07 வயது நிரம்பிய கரிகரன் கரீஸ்ராஜ் என்ற மாணவன்,
வகுப்பாசிரியர் 20 ரூபா பணம் கொண்டு வரச்சொன்னதாகவும் அதைத் தாயிடம் கேட்கவே தாய் மறுத்ததனால் தான் பாடசாலை செல்ல மறுக்கவே அதைக் கண்டித்து தாய் கத்தியை நெருப்பில் காய்ச்சி கை, கால், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சூடு வைத்ததாகவும் பொலிசாரின் வாக்கு மூலத்தில் குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.

அயல் வீட்டுக்காரர்கள் விடுத்த அவசர பொலிஸ் தொடர்பினால் வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் குறித்த மாணவனை அழைத்துச்சென்று வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளான். குறித்த தாயை கைது செய்த பொலிசார் நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளதுடன்,  மாவட்ட சிறுவர் துஷ்பிரயோக கண்காணிப்பு அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக