கொழும்பில் இருந்து மும்பை நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில், குழப்பம் விளைவித்த இந்தியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் மதுபோதையில் இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று காலை கட்டுநாயக்க விமானநிலைய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர், கட்டுநாயக்க
விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
54 வயதான இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலையப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக