வெள்ளி, 5 செப்டம்பர், 2014

தேர்தல் விதிகளை இறுக்கமாக பின்பற்ற தேர்தல் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் மனித உரிமை ஆணையாளர் விடுத்தார்!!


ஊவா மாகாணத்தில் தேர்தல் விதிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேமா தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு நேரில் அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு சகல அரச அதிகாரிகளுக்கும் தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கும் சுற்றறிக்கைகளை உடன் அனுப்பிவைக்க அமைச்சின்
செயலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஊவாவில் இடம்பெறும் கட்சி அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட தேர்தல் வன்முறைகள் மற்றும் அரச பணியாளர்களின் தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரசாரங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடவேண்டுமென ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைச் செய்திருந்தன.

அம்முறைப்பாடுகளைக் கருத்திலெடுத்த ஆணைக்குழுதேர்தல் ஆணையாளர் உட்பட அரச அதிகாரிகளை ஆணையகத்தின் முன் சமுகமளித்து விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்குமாறு கோரியிருந்தது. இதனையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை ஆஜராகி இருந்தனர். இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹாநாம ஹேமா கருத்து வெளியிடும்போதே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக