புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
நாடாளுமன்றில் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக வெளியான தகவல்களை அடுத்து, இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த காலத் தேர்தல்கள் கடுமையான அரச பலத்தையும், குண்டர் கூட்டங்களின் பலத்தையும் கொண்டு மோசடியான முறையில் நடைபெற்றவை என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் இவ்வாறு அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் தேர்தல்களில் இலகு வெற்றியீட்ட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடாத்தி அதில் சுலபமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக