யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முதலாவது பீடாதிபதி பேராசியர் கூவர் ஞாபகார்த்த கலையரங்கத்தை இன்று சனிக்கிழமை மதியம் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா திறந்துவைத்தார். சுமார் இரண்டரைக்கோடி ரூபாவுக்கு மேற்பட்ட செலவில் நவீன வசதிகள் மற்றும் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை அமைச்சர் இன்று திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண பிரதம
செயலாளர் விஜயலட்சுமி மருத்து பீடப் பீடாதிபதி உட்பட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை - மருத்துவ பீடத்துக்கான சிகிச்சையியல் கட்டடத் தொகுதிக்கான அடிகல்லுக்கான நினைவுக்கல்லை அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா திரைநீக்கம் செய்துவைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக