வெள்ளி, 22 மே, 2015

வித்தியா கொலை தொடர்பில் ஆராய பொலிஸ் மாஅதிபர் யாழ் விஜயம்: உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்.!!

யாழ். பிரதேச உயர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

அத்துடன், ஊர்காவற்துறை பிரதேசத்திற்கான பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


இதேவேளை, பொலிஸ் மாஅதிபர் என்.கே இலங்ககோன் இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

யாழ். நகரில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் ஆராய்வதற்காகவும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் பொலிஸ் மாஅதிபர் அங்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன், புங்குடுதீவு பகுதியில் கடந்தவாரம் பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைகள் தொடர்பில் கண்டறிவதும் இந்த விஜயத்தின் நோக்கமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 09 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக