ஞாயிறு, 15 நவம்பர், 2009
தரையிறங்கியுள்ள 22இலங்கையர்களையும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை..
இந்தோனேசியக் கடற்பிராந்தியத்தில் நங்கூரமிட்டுள்ள ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்து வெளியேறி தரையிறங்கியுள்ள 22இலங்கையர்களும் விரைவில் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அந்த கப்பலிலிருந்த 78பேரும் அவுஸ்திரேலியாவைத் தவிர வேறெங்கும் செல்ல முடியாதென சுமார் ஒருமாத காலமாக குறித்த கடற்பரப்பில் தரித்து நிற்கின்றனர். இந்நிலையில் அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்கும் பட்சத்தில் 04 தொடக்கம் ஆறுவாரங்களில் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவரென அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதனையடுத்து அதிலிருந்த 22பேர் இந்தோனேசியாவில் தரையிறங்க சம்மதித்து இன்றுபகல் கப்பல்மூலம் முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக