மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், சொந்த மகளின் காதல் விவகாரத்தின் எதிரொலியெனப் பேசப்பட்டதுமான இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் மூவருக்குப் பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இன்று திங்கட்கிழமை இந்த பிணை அனுமதியை வழங்கியுள்ளார்.
இதேவேளை கொலையுண்ட தம்பதிகளின் புதல்வியும், குறித்த ஆட்கொலை
வழக்கின் நான்காவது சந்தேக நபருமான பாடசாலை மாணவிக்கு இன்று பிணை வழங்கப்படவில்லை. அவரது பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற விசேட காரணங்களால் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி, சந்தேக நபரை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
செங்கலடி பதுளை வீதியைச் சேர்ந்த சிவகுரு ரகு (வயது 46), ரகு லிப்றா (வயது 41) கணவன், மனைவி ஆகியோரை 08.04.2013 இல் பொல்லால் அடித்தும், கூரிய ஆயுதத்தால் வெட்டியும் ஆட்கொலை (இரட்டைக் கொலை) செய்தாகத் தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முறையே நான்கு சந்தேக நபர்களுமான சிவநேசராஜா அஜந்த், குமாரசிங்கம் நிலக்ஸன், புவனேந்திரன் சுமன், ரகு தட்சணா ஆகியோரது பிணை கோரல் மனு தொடர்பில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் பரிசீலனைக்கு எடுத்து முதல் மூன்று சந்தேக நபர்களுக்கும் (மாணவர்கள்) பிணை அனுமதி வழங்கினார்.
முதலாவது சந்தேக நபர் சிவநேசராஜா அஜந்த் 75 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 50 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தாட்சிப்படுத்தப்பட்ட உறுதிப் பிணையிலும், இரண்டாவது சந்தேகநபரான குமாரசிங்கம் நிலக்ஸன் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று நிரந்தர வருமானம் கொண்டவர்களது அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிணையிலும், மூன்றாவது சந்தேக நபரான புவனேந்திரன் சுமன் 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும், 10இலட்சம் ரூபா பெறுமதியுடன் கூடிய மூவர் பிணையாளிகளுடனும், பிணையில் சொல்ல நீதிபதி கட்டளையிட்டு அனுமதியளித்தார்.
இவர்கள் மூவரும் வாரத்தில் இரு தினங்கள் (திங்கள் - வியாழன்) ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தமது வரவைப் பதிய வேண்டும் எனவும் வேறு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. நான்காவது சந்தேக நபரான கொலை செய்யப்பட்டவர்களின் புதல்வியும், மாணவியுமான ரகு தட்சணாவுக்கு, அவரது பாதுகாப்பு, பராமரிப்பு முதலான விசேட காரணங்களால் இன்று பிணை வழங்கப்படவில்லை எனவும் எதிர்வரும் 26 ஆம் திததி மன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த சுமார் ஒரு வருட காலத்திற்கு மேல் விளக்கமறியலில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக