வியாழன், 21 மே, 2015

வவுனியாவில் வித்தியாவின் கொலைக்கு நீதி கோரி பூரண கரத்தால்.!! சில பிரதேசங்களில் பதற்றம் (படங்கள் இணைப்பு)

வவுனியா வர்த்தக சங்கம் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் சங்கம் ஆகியன விடுத்த அழைப்பின் பெயரில் இன்றைய தினம் வவுனியா நகரம், குருமன்காடு, வைரவபுளியங்குளம், திருநாவற்குளம், பண்டாரிக்குளம் போன்ற இடங்களில் பூரண கர்த்தாலுடன் டயர் எரிப்பு சம்பவங்களும் பதிவாகிய வண்ணம் இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வன்முறைகள் மற்றும் அரச சொத்துக்களுக்கு
சேதம் விளைவிக்க கூடும் என்பதனால் அதீக பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருப்பதாக எமது நகர செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் பேரணி  நடைபெறவுள்ள பகுதியில் பொலிசாரின் குவிப்பு அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

பண்டாரிக்குளம், திருநாவற்குளம், குருமன்காடு பகுதியில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ் பூரண கர்த்தாலுக்கு தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) மற்றும் தமிழ் தேசிய இளைஞர் கழகம் என்பன பூரண ஆதரவு வழங்குவதாக ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக