
எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளும் 5 நாள் இசை நிகழ்வு எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை வவுனியா முத்தையா கலா மண்டபத்தில் நடைபெறும். வவுனியா தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் இசை விழாவில் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த கலைஞர்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதுடன் யாழ்ப்பாணம் மன்னார் மற்றும் கொழும்பிலிருந்தும் கலைஞர்கள் பங்குபற்றவுள்ளனர். இலைமறை காயாக இருக்கின்ற மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இசை விழா நிகழ்வு தினமும் மாலை 4 மணிமுதல் 7.30 மணிவரை நடைபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக