புதன், 20 மே, 2015

வவுனியா விபுலாநந்தா கல்லூரி மாணவர்களும், வித்தியாவின் கொலைக்கான நீதி கோரி ஆர்ப்பாட்டம்.!(படங்கள் இணைப்பு)

யாழில்‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‪‎மிலேச்சத்தனமான‬ ‪கொடூரத்திற்கு‬ ‪‎உடனடி‬ ‪நீதி‬ ‪‎நிலை‬ ‪‎நாட்டப்படவேண்டும் மற்றும் கொலையை கண்டித்தும் விபுலாநந்த கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தினால் காலை 11 மணியளவில் கல்லூரி பிரதான வீதியில்  ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கபட்டது.

எமது தாயகத்தில் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது சமூகம் முற்படும் வேளையில்,
இவ்வாறான இழிவான செயற்பாடுகளுக்கு நாட்டின் நீதித்துறை உயர்ந்த பட்ச பக்கச்சார்பற்ற உடனடி தீர்வினை வழங்கி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக