செவ்வாய், 26 அக்டோபர், 2010
சிறுசிறு ஆயுதக் குழுக்களினால் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது-குமார் ரூபசிங்க..!
சிறுசிறு ஆயுதக் குழுக்களினால் பாரிய அனர்த்தம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்க தெரிவித்துள்ளார். புலிகள் யுத்தரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சிறு சிறு பயங்கரவாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலும் இவ்வாறான ஓர் அனர்த்தமேயாகும். தமிழ்பேசும் மக்களின் யதார்த்தமான உரிமைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழீழ கோரிக்கை இன்னமும் முற்றாக கைவிடப்படவில்லை வெளிநாடுகளில் புலி ஆதரவாளர்கள் இயங்கி வருகின்றனர். இதன்காரணமாக இராணுவத்தினர் ஐந்தாம் தலைமுறை யுத்தம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனிச் சிங்களமொழி சட்டமூலம் தொடர்பான விவாதத்தின்போது கொல்வின் ஆர்.டி சில்வா மற்றும் ஜே.ஆர்.ஜயவர்தன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவில் யுத்தம் வெடிக்கக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தமை கவனிக்கப்பட வேண்டியதாகும். அரச கரும மொழிகளில் ஒன்றாக தமிழ்மொழி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் நடைமுறைப் பயன்பாடு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. தமிழ்மக்கள் செறிந்து வாழும் சில பிரதேசங்களில் தமிழ் மொழியில் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக் காணப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக