யாழ் பொதுநூலகம் உட்பட்ட யாழின் பல பகுதிகளில் தற்போது பேரணிகளும் பூரண கர்த்தாலும் நடைபெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் நகரின் இயல்பு நிலை மோசமடைந்துள்ளதாகவும், ஆசிரியர்கள் சுகவீன விடுமுறையில் தமது சமூக விரோதிகளுக்கான எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்-
யாழில் வித்தியாவிற்கு நிகழ்ந்த மிலேச்சத்தனமான கொடூரத்திற்கு உடனடி நீதி நிலை நாட்டப்படவேண்டும்.
எமது தாயகத்தில் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது சமூகம் முற்படும் வேளையில், இவ்வாறான இழிவான செயற்பாடுகளுக்கு நாட்டின் நீதித்துறை உயர்ந்த பட்ச பக்கச்சார்பற்ற உடனடி தீர்வினை வழங்கி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இவர்களுக்கான தீர்வின் மூலம் இனி சமூகத்தில் இவ்வாறான கொடூரங்கள் நடைபெறாமல் இருக்க வழங்கப்படும் தீர்ப்பு ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்து இனி வரும் காலங்களில் இவ்வாறான கொடூரங்கள் நிகழாமல் தடுக்க நாட்டின் நீதித்துறை செயற்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக