-வடமாகாணஅபிவிருத்திஉதவியாளர் ஒன்றியம் கடும் கண்டனம் -

சுகந்திரமானதும் நீதியானதுமானஒருநல்ல சூழலில்தான் கல்விசாத்தியம் என்பார்கள்.அதேபோல தற்போது புங்குடுதீவு மாணவி தங்கை வித்தியாவுக்கு ஏற்பட்ட சம்பவம் இந் நாட்டில் உள்ளஅனைவருக்கும் பெரும் தாக்கத்தையும்அதிர்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் எமதுதேசத்தில் வரலாற்றுரீதியாக பதிவாகிவருகின்றன. இவ்விதமானசம்பவத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கப்படவேண்டும் எனசம்பந்தப்பட்டதரப்பினரை கேட்டுக்கொள்வதுடன் இச் செயல்களில் ஈடுபடும் காமுகர்களை சட்டத்தின் முன் நிறுத்திஅதிகபட்சதண்டனைவழங்கப்படவேண்டும் என்பதுடன் எமதுசமூகம் சார்ந்த அக்கறையுள்ள சட்டபுலமையாளராகிய சட்டதரணிகள் இக் கொலையாளிகளுக்கு சார்பாக செயற்படக் கூடாது எனமன்றாட்டமாக வேண்டுவதுடன் நீதிதேவதையின் முன் மனசாட்சியின் பிரகாரம் பாதிக்கப்பட்டர்களுக்குஆதரவாககுரல் கொடுக்கவேண்டும் என்பதுடன் இவ் விடயத்தில் அக்கறையுள்ளம் கொண்ட அனைத்துதரப்பினரும் ஒன்றுபட்டு தீர்கமான முடிவெடுத்துசெயற்படுவதுடன் இனிமேலும் இவ்விதமானசம்பவம் எமதுதேசத்தில் இடம்பெறாதவண்ணம் நடவடிக்ககை எடுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
வடமாகாணஅபிவிருத்திஉதவியாளர் ஒன்றியம்,
வடமாகாணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக