
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கையூட்டல் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைளை சீர்குலைக்க அல்லது விசாரணைகளை மந்த கதியில் மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
100 நாள் வேலைத் திட்டத்திற்குள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தராதரம் பாராது தண்டிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என ஜோன் அ மரதுங்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக