
இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசா வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் தமது சொந்த நாட்டிலிருந்து தாம் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை அத்தாட்சிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக் கையளிப்பது அவசியமாகும்.
பிரித்தானியாவில் தற்போதுள்ள எல்லைப் பாதுகாப்பு விதிகளை இவ்வாறு மேலும் கடுமையாக்குவதன் மூலம் மோசமான வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதை தடுக்க முடியும் என அந்நாட்டு அமைச்சர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.
விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த நடைமுறையின் கீழ், பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள், தமக்கு எதிரான கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் சான்றிதழை தத்தமது நாட்டு அதிகாரிகளிடமிருந்து பெறவேண்டியுள்ளது.
ஆனால் இந்த புதிய நடைமுறைக்கு 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள், புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதற்கு சாத்தியமற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் விதிவிலக்குப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக