வெள்ளி, 6 மார்ச், 2015

கண்டிக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் உதய கம்மன்பில..!!

கண்டியில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“வெற்றி ஈட்டப்பட் நாடு ஆபத்தில் - தேசத்தின் சவால்களை வெற்றிகொள்ள அணி திரள்வோம்” என்ற தொனிப் பொருளில் கூட்டம் இன்று மாலை 3.00 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாகும்.

பதவிகளை விடவும் சுதந்திர நாட்டின் மீது நேசமுடைய சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பது இந்த கூட்டத்தின் மூலம் தெரிய வரும்.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பெயரிட வேண்டுமென்று கோரியே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன.

அடுத்த கூட்டம் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

இரத்தினபுரி, மொனராகல, கம்பஹா, மாத்தறை போன்ற இடங்களிலும் கூட்டம் நடைபெறவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக