திங்கள், 2 மார்ச், 2015

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் நடவடிக்கை காணி அமைச்சர்..!!!

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.
கந்தளாய் பராக்கிரம வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியை நோக்கி நாட்டை நகர்த்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத அனைத்து உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மெதிரிகிரியவில் இரண்டு உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி
மன்றங்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவேன்.

அன்று அமைச்சுப் பதவியிருந்த போதிலும் எதனையும் செய்ய முடியவில்லை.
எனினும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
எவரது தலையீடுகளும் இடையூறும் இன்றி பணிகளை செவ்வனே மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளை வான்களோ, குண்டர் கூட்டங்களோ தற்போது கிடையாது என எம்.கே.டி.எஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக