எல்லாப் பிரச்னை குறித்தும் பாகிஸ்தானுடன் திறந்த மனதுடன் பேச இந்தியா தயாராகவே உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலப் பிரச்னையாக உள்ள காஷ்மீர் விவகாரம் குறித்தும் இந்தியா பேசத் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் மீது சொந்தம் கொண்டாடிப் பேசுவதை இந்தியா நிறுத்தாதவரை அந்நாட்டுடனானப் பேச்சு பயனளிக்காது. காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமத் குரேஷி சமீபத்தில் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் இந்த பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. காஷ்மீர், இந்தியாவின் ஐக்கிய பகுதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று இந்திய தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், காஷ்மீர் தொடர்பாக குரேஷியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கையில்தான், காஷ்மீர் உள்பட எல்லாப் பிரச்னை குறித்தும் பாகிஸ்தானுடன் பேச இந்தியா தயாராகவே உள்ளது என்றார்.
பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சு நடத்தவே இந்தியா விரும்புகிறது. ஏனென்றால் இரு நாடுகளுக்கு இடையேயான சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே வழி என்று இந்தியா நினைக்கிறது. இதை பாகிஸ்தானும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். பாகிஸ்தானில் நானும், குரேஷியும் சந்தித்துப் பேசுகையில் அவரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தேன். எனது அழைப்பை அவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு, இந்தியாவுக்கு வருவதற்கு உறுதி அளித்தார். குரேஷி நிச்சயம் இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் வரும் பட்சத்தில் தில்லியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் எதை விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறதோ அதை விவாதிக்கலாம். அதேபோல, இந்தியாவும் விவாதிக்க நினைக்கும் விஷயங்களை விவாதிக்கும் என்றார்.
காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் குரேஷி கூறிய கருத்துகள் அனைத்துக்கும் இந்தியா சரியான பதிலை அளித்துவிட்டதாகவே நினைக்கிறேன். எனவே அதே பதிலை நான் திருப்பிக்கூற விரும்பவில்லை என்று எஸ்.எம். கிருஷ்ணா மேலும் தெரிவித்தார். ஐ.நா.பொது சபை கூட்டத்தில் பங்கேற்கும் இந்த வேளையில் எஸ்.எம்.கிருஷ்ணாவும், குரேஷியும் சந்தித்துப் பேசுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எல்லாப் பிரச்னை குறித்தும் பாகிஸ்தானுடன் திறந்த மனதுடன் பேச இந்தியா தயாராகவே உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலப் பிரச்னையாக உள்ள காஷ்மீர் விவகாரம் குறித்தும் இந்தியா பேசத் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மீது சொந்தம் கொண்டாடிப் பேசுவதை இந்தியா நிறுத்தாதவரை அந்நாட்டுடனானப் பேச்சு பயனளிக்காது. காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமத் குரேஷி சமீபத்தில் தெரிவித்தார். பாகிஸ்தானின் இந்த பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. காஷ்மீர், இந்தியாவின் ஐக்கிய பகுதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று இந்திய தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், காஷ்மீர் தொடர்பாக குரேஷியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கையில்தான், காஷ்மீர் உள்பட எல்லாப் பிரச்னை குறித்தும் பாகிஸ்தானுடன் பேச இந்தியா தயாராகவே உள்ளது என்றார். பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சு நடத்தவே இந்தியா விரும்புகிறது. ஏனென்றால் இரு நாடுகளுக்கு இடையேயான சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தை ஒன்றே வழி என்று இந்தியா நினைக்கிறது. இதை பாகிஸ்தானும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நானும், குரேஷியும் சந்தித்துப் பேசுகையில் அவரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தேன். எனது அழைப்பை அவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு, இந்தியாவுக்கு வருவதற்கு உறுதி அளித்தார். குரேஷி நிச்சயம் இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் வரும் பட்சத்தில் தில்லியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் எதை விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறதோ அதை விவாதிக்கலாம். அதேபோல, இந்தியாவும் விவாதிக்க நினைக்கும் விஷயங்களை விவாதிக்கும் என்றார்.
காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் குரேஷி கூறிய கருத்துகள் அனைத்துக்கும் இந்தியா சரியான பதிலை அளித்துவிட்டதாகவே நினைக்கிறேன். எனவே அதே பதிலை நான் திருப்பிக்கூற விரும்பவில்லை என்று எஸ்.எம். கிருஷ்ணா மேலும் தெரிவித்தார். ஐ.நா.பொது சபை கூட்டத்தில் பங்கேற்கும் இந்த வேளையில் எஸ்.எம்.கிருஷ்ணாவும், குரேஷியும் சந்தித்துப் பேசுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக